ADDED : ஆக 27, 2026 08:05 AM
பாதிரியாரை சந்தித்த இளைஞன் ஒருவன். 'என் பக்கத்து வீட்டுக்காரர் எரிச்சல்படும் விதத்தில் பேசுகிறார். அவரைக் பார்த்தாலே வெறுப்பாக உள்ளது'' என்றான். அதற்கு அவர், ' கவலைப்படாதே. உன் கையில் இப்போது 86,400 ரூபாய் இருப்பதாக வைத்துக் கொள். அதில் 100 ரூபாயை திருடன் பறித்துக் கொண்டு ஓடினால், உன் கையில் இருக்கும் பணத்தை போட்டு விட்டு அவனை பிடிக்க ஓடுவாயா' எனக் கேட்டார்.
'மாட்டேன்' என்றான் இளைஞன்.
'ஆனால் உன்னைப் போலவே பல மனிதர்கள் இருக்கிறார்கள். இழந்த சிறு தொகைக்காக மொத்த பணத்தையும் வீணாக்குகின்றனர்' என்றார் பாதிரியார். புரியாமல் விழித்தான் இளைஞன்.
'ஒரு நாள் என்பது 24 மணி நேரம். அதாவது 86,400 வினாடிகள். நீ எரிச்சல்படும்படி யாரோ ஒருவர் பேசினாலோ, திட்டினாலோ அதை பற்றியே தொடர்ந்து சிந்திக்காதே. மீறினால் அந்த நாளே வீணாகும்.
சில நிமிட வேதனைக்காக நேரத்தை வீணாக்குவது முட்டாள்தனம். நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடு. இது உனக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் பொருந்தும்' என்றார் பாதிரியார்.
