ADDED : ஆக 27, 2026 08:06 AM
அ நிறம் | அளவு
கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ தன் நண்பரைக் காணச் சென்றார்.
வழியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அதில் தங்களுக்குள் சண்டையிட்ட இருவர் கீழ்த்தரமாக பேசுவதைக் கேட்டு திடுக்கிட்டார். கோபத்துடன், 'உங்கள் பெற்றோரை கூப்பிடுங்கள்' என்றார்.
சிறுவர்களும் அழைத்து வந்தனர். அவர்களின் கன்னத்தில் 'பளார்... பளார்...' என அறைந்தார். 'இதுதான் குழந்தை வளர்க்கும் லட்சணமா... கீழ்த்தரமாக பேச யாரிடம் கற்றுக் கொண்டார்கள். பெரியவராக வளர்ந்தால் நிலைமை இன்னும் மோசமாகும்.இவர்கள் திருந்த வேண்டும் என்பதற்காகவே கல்விக்கூடத்தை நடத்துகிறேன் என்றார்.
பெற்றோர் மன்னிப்பு கேட்டதோடு பள்ளியில் சேர்க்க முடிவு செய்தனர்.
