ADDED : நவ 20, 2026 08:14 AM
வீட்டுக்கு வந்த நண்பர் ஜோசப்பிடம், 'என் மகன் ஞானதாஸ் எந்த வேலை செய்தாலும் சொதப்புவான்' எனக் குறை சொன்னார் ஆப்ரகாம். தந்தையின் பேச்சைக் கேட்ட
ஞானதாஸ், 'என்னால் படிக்கவும் முடியலை; எந்த வேலையும் சரியா செய்ய முடியலை' என தன்னைத் தானே நொந்துகொண்டான்.
ஜோசப் அவனிடம், 'கேக் வாங்கி வா' என பணம் கொடுத்தார். உடனே ஆப்ரகாம், 'நீங்க வேணா பாருங்க...எப்படி சொதப்புறான்னு' என்றார்.
பயத்துடன் சென்ற ஞானதாஸ் கேக் வாங்கி விட்டு வரும் வழியில் கையில் இருந்த ஐந்து ரூபாய் நழுவியது. கேக்கையும், சில்லறையையும் ஜோசப்பிடன் கொடுத்தான் ஞானதாஸ்.
'ஐந்து ரூபாய் குறையுதே...' எனக் கேட்டார் ஜோசப்.
உடனே ஆப்ரகாம், 'நான்தான் சொன்னேனே சொதப்புவான்னு. சில்லறையைக் கூட சரியா வாங்கிட்டு வரல பாருங்க' எனக் கத்தினார்.
தந்தை சொல்வது உண்மை என ஞானதாஸும் நம்பினான். ஆப்ரகாமை போல பலரும் குழந்தைகளை திருத்துவதாக நினைத்து தன்னம்பிக்கை இல்லாதவராக வளர்க்கின்றனர். 'பாசிட்டிவ்'வாக பேசி அவர்களின் மனதில் நம்பிக்கையை வளர்ப்பது பெற்றோரின் கடமை.
