ADDED : நவ 26, 2026 10:30 AM
அ நிறம் | அளவு
ரஷ்ய அறிஞர் டால்ஸ்டாய் எளிமையானவர். அவர் ஒரு முறை ரயில் நிலையத்தில் நண்பரைக் காண வந்திருந்தார். அவரின் தோற்றத்தை பார்த்த பெண் ஒருவர், கடை நிலை ஊழியர் என நினைத்து தன்னுடைய பெட்டியைத் துாக்கி வெளியே வைக்கச் சொன்னாள். அவரும் எடுத்து வைத்தார். அந்த பெண் கொடுத்த கூலியை வாங்கிக் கொண்டார்.
அச்சமயம் டால்ஸ்டாயை பார்த்த சிலர், கைகொடுத்து நலம் விசாரித்தனர். அத்துடன் ஆசியும் பெற்றனர். இதை பார்த்ததும், கூட்டத்தில் இருந்த ஒருவரிடம் அவர் யார் என விசாரித்தார். உடனே டால்ஸ்டாயிடம் மன்னிப்பு கேட்டாள் அந்த பெண். அதற்கு அவரோ, 'எதற்கு மன்னிப்பு. வேலை தான் செய்தேன். கூலியையும் தந்தீர்கள். உழைப்பது தானே சுகம்'' என்றார்.
