தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/கிளம்பிட்டேன்...

கிளம்பிட்டேன்...

கிளம்பிட்டேன்...


ADDED : நவ 26, 2026 10:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2026 10:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மலை உச்சியில் இருந்தது ஒரு பள்ளிக்கூடம். அங்கு படித்தான் சாலமன். தீய நண்பர்களின் சேர்க்கையால் ஊரைச் சுற்றினான். ஒரு வாரமாக பள்ளிக்கு வரவில்லை. ஆசிரியர் அவனை பார்க்க நினைத்தார். வார விடுமுறையான ஞாயிறன்று அவனுடைய வீட்டுக்கு சென்றார்.

அப்போது குளிர் அதிகமாக இருந்ததால், மரக்குச்சிகளை எரித்தபடியே குளிர் காய்ந்து கொண்டிருந்தான் சாலமன்.

'சாலமன்' என அழைக்கும் சத்தம் கேட்கவே கதவை திறந்தான். வாசலில் நின்றிருந்தார் ஆசிரியர்.

திகைப்புடன் 'வாங்க சார்' என்றான். புன்னகைத்தபடி வந்த அவரும் அவனுடன் குளிர் காய்ந்த படி அருகில் உட்கார்ந்தார்.

நெருப்பை கவனித்தாரே தவிர, அவர் வாய் திறக்கவில்லை. சாலமனுக்கு எதுவும் புரியவில்லை. பட்டென எழுந்தார் ஆசிரியர். இடுக்கியால் மரத்துண்டு ஒன்றை நெருப்பில் இருந்து எடுத்து கீழே வைத்து விட்டு உட்கார்ந்தார். அதில் இருந்த நெருப்பு அணைந்தது. அதை மீண்டும் நெருப்பில் இட்டார். அது வேகமாக பற்றியது.

அப்போது ஆசிரியர் அவனிடம், இந்த குச்சியை போலத்தான் நீயும். பள்ளிக்கூடத்திற்கு வந்தால் தான் அறிவு வளரும். இல்லாவிட்டால் அணைந்து விடும்.

உண்மையை உணர்ந்த அவன், 'நாளை முதல் பள்ளிக்கு வருகிறேன்' என்றான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us