ADDED : நவ 26, 2026 10:37 AM

அ நிறம் | அளவு
'இந்த வேலை எனக்கே' என்ற நம்பிக்கையுடன் இன்டர்வியூவுக்கு வந்தான் ஜெரோம். ஆனால் அந்த வேலை வேறு ஒருவருக்கு கிடைத்தது. அவன் மனதிற்குள், 'என்னை விட அவன் அழகாக டிரஸ் பண்ணியதால் வேலை கிடைத்ததோ... நேர்முகத் தேர்வு நடத்துபவருக்கு சொந்தக்காரனாக இருப்பானோ...
பெரிய மனிதர்களின் சிபாரிசு இருக்குமோ...
அரசியல்வாதியின் தலையீடு காரணமோ... என சந்தேகம் வந்தது.
தகுதி இருந்தும், தன்னை தேர்வு செய்யவில்லையே என கவலைப்பட்டான். பதில் தெரிந்தும் தயக்கத்தால் அரைகுறையாக பதில் சொன்னான். அதனால் அவன் தேர்வாகவில்லை. படித்தால் மட்டும் போதாது. அதை சொல்வதற்கு துணிவு அவசியம். தயக்கத்தை உதறு' என்கிறது நீதிமொழி.
