ADDED : ஜூலை 30, 2012 03:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இயேசு கிறிஸ்துவுக்கு வழங்கிய சிலுவை மரணத்தீர்ப்பு உலக வரலாற்றில் நடந்த விசேஷித்த நியாயத்தீர்ப்பு. அத்தீர்ப்பின் விளைவு என்ன என்று ஆராய்ந்தால், முழு உலகத்திற்கும் அவர் பெரும் ஆசிர்வாதத்தை சம்பாதித்து தந்துள்ளார் என தெரிய வரும். பைபிளில் அது குறித்த வசனங்களை வாசிப்போம்.
* அவர் தண்டிக்கப்பட்டதால் நாம் மன்னிக்கப்பட்டோம்.
* அவர் சிலுவையில் தொங்கியதால் நாம் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம்.
* அவர் கைவிடப்பட்டதால் நாம் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறோம்.
* அவர் பாவமாக்கப்பட்டதால் நாம் நீதிமான்களாக்கப்பட்டோம்.
* அவர் தழும்புகளை ஏற்றுக்கொண்டதால் நாம் குணமானோம்.
* அவர் ஆக்கினை தீர்ப்பை ஏற்றுக்கொண்டதால் நாம் விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.
* ஒருவரது உயிர் தியாகத்தால் உலகமே பேறடைந்தது உண்மை தானே!
- தேவனின் வார்த்தை இதழிலிருந்து