நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அபார்ட்மென்டில் வீடு வாங்க பல லட்சம் தேவைப்படும். ஆனால் வீட்டிலுள்ள தரை மட்டும் நமக்குச் சொந்தம். மூன்று பக்க சுவர்கள், கூரை யாவும் அண்டை வீட்டாருக்கும், நமக்கும் பொதுவானது. லிப்ட், படிக்கட்டுகள், பால்கனி எல்லாம் அது போலத்தான். அவற்றை பயன்படுத்தலாம். உரிமை கொண்டாட முடியாது. பூமியில் வாழ ஆண்டவர் இடம் கொடுத்திருக்கிறார்.
எல்லாவற்றையும் ரசியுங்கள். எதுவும் நிரந்தரம் அல்ல. உடலை விட்டு உயிர் பிரிந்த பின் எதையும் எடுத்துச் செல்ல முடியாது.