நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு தீபத்தை ஏற்றி வைப்பது எளிது. அணையாமல் பாதுகாப்பது கடினம். எண்ணெய் இல்லாவிட்டாலும், எரியத் தேவையான காற்று இல்லாவிட்டாலும் தீபம் அணையும்.
அது போல வாழ்வதற்கு உணவு, உடை, இருப்பிடம் அவசியம். இவை இல்லாமல் பலர் உலகில் துன்பப்படுகிறார்கள். தேடிச் சென்று உதவினால் அவர்களின் வாழ்வு பிரகாசமாகும். இந்த உதவி தீபம் அணையாமல் காப்பதற்கு சமம்.