
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோ ஒரு தேவை அல்லது விருப்பம் இருக்கும். இதற்காக தினமும் ஜெபம் செய்வார்கள்.
சிலருக்கு கேட்டதும் கிடைக்கும். சிலருக்கு கிடைக்காது. பணம், நகை, சொத்து என எதற்கும் சிலர் ஆசைப்பட மாட்டார்கள். நிம்மதியுடன் வாழ்ந்தால் போதும் என நினைப்பார்கள். இப்படி மனதில் தோன்றுவதை ஆண்டவரிடம் கேட்கலாமா... என்றால் நம் பார்வையில் சரி என்றே தோன்றும். ஆனால் நீதியின் பார்வையில் சரியல்ல. 'ஆண்டவரே... நீ விரும்பியதைக் கொடு' என்றே பிரார்த்திக்க வேண்டும் என்கிறது நீதிமொழி.