நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர். குடும்பச்சூழலை நினைத்தால் இவர்கள் பொறுப்பின்றி நடக்க மாட்டார்கள். இனியாவது இந்நாளில் பிரார்த்தனையில் ஈடுபடுங்கள்.
'எப்போதும் நல்ல பழக்கங்களை பின்பற்றுவேன்; சமுதாய நலனுக்காக என் பங்களிப்பைச் செய்வேன்' என சபதம் செய்யுங்கள். ஒருபோதும் கலாச்சாரத்தை சீரழிக்கும் தீய செயல்களில் ஈடுபடாதீர்கள். 'என் மீது பிரியம் கொண்டவர் பொறுப்புடன் செயல்படுவர்' என்கிறார் ஆண்டவர்.