ADDED : மார் 08, 2024 02:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தந்தையின் சொல்லை மீறி ஆர்வக் கோளாறால் நீச்சல் பழக கிணற்றுக்குச் சென்றனர் மூன்று சகோதரர்கள். கிணற்றின் படிக்கட்டுகளில் பாசி படர்ந்திருந்தது.
ஆர்வம் மிகுதியால் கடைக்குட்டி சகோதரன் அதில் கால் வைக்கவே, கிணற்றுக்குள் விழுந்தான். மற்ற இருவரும் படபடத்தனர். அருகில் சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் தத்தளித்த சிறுவனைக் காப்பாற்றினார். 'துணைக்கு யாரும் வரவில்லையா' என முதியவர் கேட்ட போது அமைதியாக நின்றனர்.
''குழந்தைகளே! பெற்றோரே உமக்கு ஆசிரியரும் ஆவர் என்னும் தேவமொழி உங்களுக்கு தெரியாதா'' எனக் கேட்டார். மூவரும் தலையசைத்தனர்.