
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாலு பேர் மெச்சும்படி வாழணும் என பெரியவர்கள் சொல்வார்கள். அதற்காக பேராசையுடன் சிலர் அநியாய வழியில் பணம் சம்பாதிக்கின்றனர்.
அவர்களிடம், 'அந்த நாலு பேர் யார்' எனக் கேட்டால் செல்வந்தராக வாழும் தன்னுடைய உறவினர்களின் பெயர்களை வரிசையாகச் சொல்வார்கள். உண்மையில் நாலு பேர் யார் தெரியுமா... தாய், தந்தை, ஆசிரியர், ஆண்டவர்.
இந்த நால்வருக்கும் நன்றியுடன் இருப்பதும், நல்ல வழியில் பணம் சம்பாதிப்பதுமே நல்ல வாழ்க்கை.