ADDED : பிப் 12, 2016 12:00 PM
ஒரு மனிதன் இறந்தவுடன் பரலோகத்துக்கு சென்றான். வாசலில் தேவதூதன் தடுத்து நிறுத்தி, ''இதன் உள்ளே செல்ல உனக்கென்ன தகுதியிருக்கிறது என்பதை பத்து வாக்கியங்களில் சொல்லிவிட்டு போகவேண்டும். நீ சொல்வது எனக்கு திருப்தியாகி நூற்றுக்கு நூறு மார்க் வாங்கினால் தான் உள்ளே அனுமதிப்பேன் ,'' என்றான்.
அந்த மனிதன், 'நான் ஆண்டவரை வணங்க ஆலயம் போவேன்,'' என்றதும், தூதன் 2 மார்க் போட்டான். காணிக்கை கொடுப்பேன் என்றதும் 3 மார்க் கிடைத்தது.
குழந்தைகளுக்கு இயேசுவைப் பற்றி கதைகள் சொல்வேன் என்றதும் 5 மார்க் கிடைத்தது. இப்படியே பதில் சொல்லியும் 20 மார்க்கை தாண்டவில்லை.
ஒன்பதாவது வாக்கியம் முடிந்ததும், பயந்து போன அந்த மனிதன், 'ஐயா! இயேசு என் பாவத்தை ஏற்று ஏற்கனவே ரத்தம் சிந்திவிட்டார், எனவே நான் பாவமற்றவன். இந்த ஒரு தகுதியே நான் முழுமார்க் பெற தகுதியாகும்,'' என்றதும், பரலோகத்தின் கதவுகள் திறந்து விட்டன.
ஆம்...இயேசுவை விசுவாசிக்க வேண்டும். அவரது கருத்துக்களை மதித்து வாழ வேண்டும். பைபிளில் சொல்லப் பட்டுள்ள சமாதானம், கடவுள் மீதான விசுவாசம் ஆகிய நற்கருத்துக்களை மதித்து நடக்க வேண்டும். பாவம் செய்வதை அறவே விட வேண்டும். இவ்வாறு எவர் ஒருவர் வாழ்கிறாரோ, அவர் நூற்றுக்கு நூறு மார்க் பெற்று பரலோகத்தில் எளிதில் நுழைவார்.