தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/செய்திகள்/ஈஸ்டர் திருநாள் சிறப்பு திருப்பலி மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு

ஈஸ்டர் திருநாள் சிறப்பு திருப்பலி மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு

ஈஸ்டர் திருநாள் சிறப்பு திருப்பலி மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு


ADDED : ஏப் 06, 2026 12:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2026 12:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை அலங்கார அன்னை மற்றும் வல்லனி அன்னை தெரசா சர்ச்சில் ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, சிறப்பு திருப்பலி நடத்தினர்.

இயேசு உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் திருநாளாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு சிவகங்கை அலங்கார அன்னை சர்ச்சில் சிவகங்கை மறைமாவட்ட பிஷப் லுார்து ஆனந்தம் தலைமையில் கிறிஸ்தவர்கள் கையில் மெழுகு வர்த்தியை ஏந்தி, சிறப்பு திருப்பலி நடத்தினர்.

வட்டார அதிபர் ஜெபமாலை சுரேஷ், உதவி பாதிரியார் ஸ்டீபன் உட்பட அலங்கார அன்னை சர்ச் பங்கை சேர்ந்த அனைத்து கிறிஸ்தவர்களும் ஈஸ்டர் திருநாள் சிறப்பு திருப்பலியில் பங்கேற்னர். சிவகங்கை அருகே வல்லனி அன்னை தெரசா சர்ச்சில் பாதிரியார் பிலிப் தலைமையில் பாதிரியார்கள் சிறப்பு திருப்பலி நடத்தினர். இந்த சர்ச் பங்கை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் திருநாளில் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு திருப்பலியில்பங்கேற்றனர்.

காரைக்குடி: செக்காலை சகாய மாதா சர்ச்சில் பாதிரியார் சார்லஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இயேசு சபை பாதிரியார் ஜேம்ஸ் திருப்பலி நிறைவேற்றினார். செஞ்சை குழந்தை தெரசாள் சர்ச், ஆவுடைப்பொய்கை அந்தோணியாளர் சர்ச், மானகிரி ஆரோக்கிய அன்னை சர்ச்களில் ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு நடத்தினர்.

திருப்புவனம்: தெய்வீக ஆராதனை ஜெப வீடு சார்பில் நேற்று காலை ஈஸ்டர் ஊர்வலம் இந்திரா நகரில் துவங்கியது. பாதிரியார் ஜஸ்டின் ஜெபராஜ் துவக்கி வைத்தார்.

கிறிஸ்தவர்கள் இயேசுவின் பாடலை பாடியபடியே முக்கிய வீதிகள் வழியாக வந்து பழையூர் சர்ச்சில் நிறைவு செய்தனர். அங்கு சிறப்பு திருப்பலி நடந்தது.

திருப்புத்துார்: இங்குள்ள அமல அன்னை சர்ச்சில் பாதியார் அற்புத அரசு தலைமையில் சிறப்பு திருப்பலிநடந்தது. கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us