ADDED : ஜூலை 26, 2019 03:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்தேனிறைக்கும் நறைக்கூந்தற் பிடியே வருக!
முழுஞான பெருக்கே வருக!
பிறை மவுலி பெம்மான் முக்கண்சுடர்க்கு
நல்விருந்தே வருக! முழுமுதற்கும் முத்தே வருக!
வித்தின்றி விளைந்த பரமானந்தத்தின் விளைவே வருக!
பழுமறையின் குருந்தே வருக! அருள்பழுத்த
கொம்பே வருக! திருக்கடைக்கண் கொழித்த
கருணைப் பெருவெள்ளம் பிடைவார்
பிறவிப்பிணிக்கோர் மருந்தே வருக!
பசுங்குந்தழலை மழலைக்கிளியே வருக!
மலையத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே!
விளக்கேற்றியதும் இதைப் பாடினால் செல்வம், மனநிம்மதி, உடல்நலம், மோட்சம் கிடைக்கும்.