sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஆக 28, 2025 12:40 PM

Google News

ADDED : ஆக 28, 2025 12:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆக.29 ஆவணி 13: முகூர்த்த நாள். சம்பா சஷ்டி விரதம். மதுரை சொக்கநாதர் தருமிக்கு பொற்கிழி அருளிய காட்சி. ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார் புறப்பாடு. குறுக்குத்துறை முருகன் பவனி. திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கு தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனம்.

ஆக.30 ஆவணி 14: முக்தாபரண சப்தமி. மதுரை சொக்கநாதர் உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடல். ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு. திருப்பரங்குன்றம் முருகன் புறப்பாடு. ஸ்ரீரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், மதுரை கூடலழகர் திருமஞ்சனம்.

ஆக.31 ஆவணி 15: துார்வாஷ்டமி. ஜேஷ்டாஷ்டமி. லட்சுமி விரதம் ஆரம்பம். மதுரை சொக்கநாதர் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயர் திருமஞ்சனம். குலச்சிறை நாயனார் குருபூஜை.

செப்.1 ஆவணி 16: நந்த நவமி. கேதார விரதம் ஆரம்பம். மதுரை சொக்கநாதர் வளையல் விற்றருளிய காட்சி. அகோபிலமடம் 2வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

செப்.2 ஆவணி 17: கஜலட்சுமி விரதம். மதுரை சொக்கநாதர் நரிகளைப் பரிகளாக்கிய திருவிளையாடல். அகோபிலமடம் 28 வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். தென்காசி விஸ்வநாதர் தெப்போற்ஸவம். ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு. குங்குலியக்கலய நாயனார் குருபூஜை.

செப்.3 ஆவணி 18: ஏகாதசி விரதம். மதுரை சொக்கநாதர் புட்டுத்திருவிழா. ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். அழகர்கோவில் கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பால் அபிஷேகம்.

செப்.4 ஆவணி 19: முகூர்த்த நாள். மதுரை சொக்கநாதர் விறகு விற்றருளிய காட்சி. திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். இன்று மா, பலா, புளி வைக்க நல்ல நாள்.






      Dinamalar
      Follow us