தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/அம்மாடியோவ்... அண்ணாமலை

அம்மாடியோவ்... அண்ணாமலை

அம்மாடியோவ்... அண்ணாமலை


ADDED : நவ 20, 2026 08:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2026 08:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* திருவண்ணாமலை கோயிலின் பரப்பு 10 லட்சத்து 67 ஆயிரத்து 993 சதுரஅடி (24 ஏக்கர்).

* 171 அடி உயரம் கொண்டது அம்மணியம்மாள் கோபுரம். விஜயநகர மன்னர்களால் தொடங்கிய இந்த கோபுரப்பணி, பாதியில் நின்றது. இதைக் கட்டி முடித்த அம்மணியம்மாளின் பெயர் தற்போது வழங்கப்படுகிறது.

* திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை சிறப்பிக்கும் விதத்தில், அகல் விளக்கு சித்திர முத்திரையை 1997 டிச.12ல் அஞ்சல்துறை வெளியிட்டது.

* திருமூலர் பாடிய திருமந்திரத்தில் அடி முடி தேடிய திருவண்ணாமலை வரலாறு குறித்த ஒன்பது பாடல்கள் உள்ளன.

* ஓய்வில்லாமல் அன்னதானம் அளிக்கும் மடம் திருவண்ணாமலை திருவூடல் தெருவிலுள்ள ஓயாமடம். மழை போல வள்ளல் தன்மை கொண்டதால் ஓயாமாரி மடம் என்றும் சொல்வர்.

* செவ்வாயன்று திருவண்ணாமலையை சுற்றினால் மோட்சம் கிடைக்கும் என்கிறார் சேஷாத்ரி சுவாமிகள்.

* லிங்கோத்பவர் தோன்றிய தலம் அண்ணாமலை. கருவறையின் பின்புறம் இவரது சன்னதி உள்ளது.

* திருவண்ணாமலையின் தலவிருட்சம் மகுட மரம். மகிழ மரம், வடவால விருட்சம் என்றும் சொல்வதுண்டு.

* அக்னி நட்சத்திர காலத்தில் அண்ணாமலையாருக்கு வாசனை திரவியம் கலந்த குளிர்ந்த நீரில் அபிஷேகம், தயிர் சாதம் படைத்து, நீர் சொட்டும் தாராபாத்திரத்தை லிங்கத்தின் உச்சியில் வைப்பர்.

* ரமணாசிரம வளாகத்தில் தலைவலி சாமி சமாதி உள்ளது. தலைவலி தீர பக்தர்கள் இங்கு சுற்றி வந்து வழிபடுகின்றனர்.

* கார்த்திகை தீபத்திற்கு மறுநாளும், தை மூன்றாம் தேதியும் அண்ணாமலையார் மலை சுற்றி வருவார்.

* மலை மீதுள்ள முலைப்பால் தீர்த்தத்தை சீர்படுத்தியவர் நரிக்குட்டி சுவாமிகள். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர், சிவபக்தராக மாறினார். தமிழில் சரளமாக பேசுவார்.

* திருவண்ணாமலைக்கு தென்திசை கைலாயம், கவுரி நகரம், சுத்த நகரம், ஞானபுரி என்றும் பெயர் உண்டு.

* இங்கிலாந்து அறிஞர் பால்பிரண்டன் எழுதிய நுாலில் திருவண்ணாமலை, ரமணர் பற்றிய குறிப்புகள் உள்ளன.

* திருவண்ணாமலை ஆண்டார், மகாதேவர், திருவண்ணாமலை ஆழ்வார், அண்ணா நாட்டு உடையார், திருவண்ணாமலை உடையார் ஆகிய பெயர்களால் அண்ணாமலையார் குறிக்கப்படுகிறார்.

* திருவெம்பாவை பாடலை மாணிக்கவாசகர் பாடிய தலம் திருவண்ணாமலை.

* அண்ணாமலை கோயிலுக்கு 100 ஏக்கர் தானம் அளித்தவர் தர்மகர்த்தா தனக்கோட்டி முதலியார்.

* சிறுத்தை, கரடி, மான், காட்டு எருமை ஆகியவை திருவண்ணாமலையில் இருந்தன.

* திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் முதல்நாள் துர்கை, இரண்டாம் நாள் பிடாரியம்மன், மூன்றாம் நாள் விநாயகர் வழிபாடு நடக்கிறது.

* இரு தல புராணம் திருவண்ணாமலை கோயிலுக்கு உள்ளன. இதில் அருணகிரி புராணத்தை எழுதியவர் கண்கட்டி மறைஞானசம்பந்தர். அருணாசல புராணத்தை எழுதியவர் சைவ எல்லப்ப நாவலர்.

* சோணாசலத்திற்கு (திருவண்ணாமலைக்கு) சிறந்த க்ஷேத்திரம் இல்லை; சோமவாரத்திற்கு சிறந்த விரதமில்லை என்ற பழமொழி உண்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us