ADDED : நவ 20, 2026 08:01 AM

ஆதிரா.எம், கல்யாண்புரி, டில்லி: *வீட்டில் எத்தனை தீபம் ஏற்றலாம்?
எண்ணிக்கை தேவையில்லை. நிறைய தீபங்களை வரிசையாக ஏற்றுங்கள்.
திவ்யா.ஆர், திருமங்கலம், மதுரை: *விளக்கு எந்த உலோகத்தில் இருப்பது சிறப்பு?
பூஜை அறையில் வெள்ளி, பித்தளை விளக்கும், வாசலில் மண்ணால் ஆன விளக்கும் ஏற்றுங்கள்.
ரவி.கு, முருங்கப்பாக்கம், புதுச்சேரி: *கார்த்திகை தீபத்தை எத்தனை நாள் ஏற்றலாம்?
கார்த்திகை 1 முதல் தை 1 வரை ஏற்றலாம்.
பூர்வீகா.ஏ, திருநின்றவூர், திருவள்ளூர்: *திருக்கார்த்திகை தீபத்தை தரிசித்தால்...
பாவம் தீரும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
சுந்தரம்.கே, நாகர்கோவில், கன்னியாகுமரி: *தீபத்தின் தத்துவம்...
ஆணவத்தை போக்கி மனப் பக்குவத்தை தரும்.
முருகன்.எஸ், பழநி, திண்டுக்கல்: *திருக்கார்த்திகை அன்று மலையைச் சுற்றினால்...
விருப்பம் நிறைவேறும். கார்த்திகை மாத பரணி நட்சத்திரம் முதல் உத்திர நட்சத்திரம் வரை (11 நாள்) சுற்றினால் நன்மை.
மோகன்.ரா, வல்லநாடு, துாத்துக்குடி: *திருக்கார்த்திகை அன்று மலையில் தீபம் ஏற்றுவது ஏன்?
சிவன் நெருப்பு வடிவில் பிரம்மா, மகாவிஷ்ணுக்கு காட்சியளித்த நாள் திருக்கார்த்திகை. அதனால் மலையில் தீபம் ஏற்றுகிறோம்.
தேவதர்ஷினி.கே, ஊட்டி, நீலகிரி: *திருவண்ணாமலைக்கும் திருக்கார்த்திகைக்கும் என்ன தொடர்பு?
சிவனின் உடம்பில் தான் இடம் பெற பார்வதி தவமிருந்த இடம் இது. பின் இருவரும் இணைந்து திருக்கார்த்திகை அன்று அர்த்தநாரீஸ்வரராக தோன்றினர்.
ச.மீனா, தாம்பரம், சென்னை: *கார்த்திகை அன்று எல்லா கோயில்களிலும் தீபமேற்றுவது கட்டாயமா...
எல்லா கோயில்களிலும் தீபமேற்றுவது கட்டாயம்.
