ADDED : நவ 05, 2026 12:57 PM

நவ.6 ஐப்பசி 20: பிரதோஷம். ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. கரிநாள்.
நவ.7 ஐப்பசி 21: மாத சிவராத்திரி. நரக சதுர்த்தசி ஸ்நானம். மயிலாடுதுறை கவுரி மாயூரநாதர் உற்ஸவம் ஆரம்பம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் கோயிலில் வரதராஜப் பெருமாளுக்கு திருமஞ்சனம். ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி பாலாபிஷேகம். கிருபானந்த வாரியார் நினைவு நாள்.
நவ.8 ஐப்பசி 22: அமாவாசை விரதம். தீபாவளி. கேதார கவுரி விரதம். வள்ளியூர் முருகன் உற்ஸவம் ஆரம்பம். வீரவநல்லுார் சுவாமி, அம்பாள் ஊஞ்சலில் காட்சி. மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் சாற்றுதல். திருஇந்தளூர் பரிமள ரங்கராஜர் உற்ஸவம் ஆரம்பம். ஸ்ரீபெரும்புதுார் பிள்ளைலோகாச்சாரியார் பவனி. மெய்கண்ட நாயனார் குருபூஜை.
நவ.9 ஐப்பசி 23: அமாசோம பிரதட்சணம். உத்திரமாயூரம் வள்ளலார் சன்னதியில் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு. திருவனந்தபுரம், திருவட்டாறு தலங்களில் சிவன் பவனி. ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரானுக்கு பாலாபிஷேகம்.
நவ.10 ஐப்பசி 24: சந்திர தரிசனம். கோவர்த்தன விரதம். சகல முருகன் கோயில்களில் கந்த சஷ்டி உற்ஸவம் ஆரம்பம். மதுரை சமீபம் சோலைமலை முருகனுக்கு மகா அபிஷேகம். சிக்கல் சிங்காரவேலவர், குமாரவயலுார் முருகன் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம். குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு. பூசலார் நாயனார் குருபூஜை.
நவ.11 ஐப்பசி 25: முகூர்த்த நாள். எமத்துவிதியை. திருஇந்தளூர் பரிமளரங்கராஜர் கருட வாகனத்தில் புறப்பாடு. இன்று செடி, கொடிகள் வைக்க நன்று.
நவ.12 ஐப்பசி 26: குமாரவயலுார் முருகன் ரிஷப வாகனத்தில் வீதியுலா. மயிலாடுதுறை கவுரிமாயூரநாதர் மூன்று கொத்து மஞ்சத்தில் பவனி. ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் தேர்.
