ADDED : நவ 05, 2026 12:42 PM

ராஜி.எம், வண்டலுார், செங்கல்பட்டு: தீபாவளி என்றால்...
வரிசையாக விளக்கு ஏற்றுவது.
குமார்.எம், தக்கலை, கன்னியாகுமரி: *தீபாவளி கொண்டாட்டம் ஏன்?
1) வனவாசம் முடிந்து சீதையும், ராமரும் அயோத்திக்கு திரும்பிய நாள்.
2) பகவான் கிருஷ்ணர் அசுரனான நரகாசுரனை வதம் செய்த நாள்.
ராஜன்.எஸ் பழநி, திண்டுக்கல்: *தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்?
புனித நதிகளான கங்கை, காவிரியில் நீராடிய புண்ணியம் கிடைக்கும்.
கவிதா.கே, திருநின்றவூர், திருவள்ளூர்: *தீபாவளிக்கு புதிய ஆடை அணிவது ஏன்?
நரகாசுரனின் இறப்பை புதிய ஆடையுடன் எல்லோரும் கொண்டாட வேண்டும் என, கிருஷ்ணரிடம் அவனது தாய் சத்தியபாமா வரம் பெற்றாள்.
ரவி.பி, சிதம்பரம், கடலுார்: *தீபாவளி அன்று சுமங்கலிகள் விரதம் இருப்பது ஏன்?
தம்பதி ஒற்றுமைக்காக... (கேதார கவுரி விரதம்)
ராதிகா.பா, எழுமலை, மதுரை: *நரகாசுரனைக் கொன்ற நாளில் தீபம் ஏற்றலாமா...
அசுரன் என்னும் இருள் மறைந்து, எங்கும் ஒளி பரவியதால் தீபம் ஏற்றுகிறோம்.
காந்திமதி.சி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி: *பட்டாசு வெடிக்கும் பழக்கம் எப்படி வந்தது?
உல்காமுகம் என்ற தீப்பந்தத்தை வெடிக்கச் செய்யும் வழக்கம் முன்பு இருந்தது. அதுவே இப்போது பட்டாசு.
வினோத்.ஷி, பெங்களூரு: *பெயரில் தீபத்தை கொண்ட கடவுள் இருக்கிறாரா......
காஞ்சிபுரத்தில் இருக்கிறார். அவரது பெயர் விளக்கொளி பெருமாள்.
யாழினி,கு, கருமத்தம்பட்டி, கோயம்புத்துார்: *தீபாவளி அன்று சிலர் லேகியம் சாப்பிடுகிறார்களே...
அதிக பலகாரம் சாப்பிடுவதால் சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், கருஞ்சீரகம் கலந்த லேகியத்தை சாப்பிடுகிறோம். இது செரிமானத்தை சீராக்கும்.
