தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : அக் 29, 2026 12:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2026 12:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிஷோர்.சா, சக்குர்பூர், டில்லி: என் தாயார் என்னுடன் நிரந்தரமாக வசிக்க வழியுண்டா...

என்னுடன் இருங்க' என நீங்களும், மனைவியும் அன்பாக அவரிடம் சொல்லுங்கள். எந்த சூழலிலும் அவரை விட்டுக் கொடுக்காதீர். எப்போதும் உங்களுடனே இருப்பார்.

மீனாட்சி.சொ, மேலுார், மதுரை: குடும்ப அமைதிக்கு யாரை வழிபடலாம்?

திருத்தணி முருகனை வழிபடுங்கள். வெள்ளிதோறும் மவுன விரதம் இருங்கள்.

ஆனந்தி.யு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம்: சஷ்டி அப்த பூர்த்தி (60 வயது) அன்று கனகாபிஷேகம் (தங்க நாணயத்தால் அபிஷேகம்) செய்யலாமா?

பிள்ளைகள் விரும்பினால் செய்யலாம்.



யுவஸ்ரீ.எம், மாடப்பாக்கம், சென்னை: திருமணத்தில் தடையும், தாமதமும் ஏன்

பெற்றோர் சொல்வதை பிள்ளைகள் ஏற்காததே காரணம். இளைஞர்கள் சம்பாதிக்கிறார்கள். யோசிக்கிறார்கள். ஆனால் முடிவெடுக்க தயங்குகிறார்கள்.

விக்னேஷ்வரி.கே, தாடிக்கொம்பு, திண்டுக்கல்: திருமணத்தில் சடங்குகள் குறைகிறதே...

ஆடம்பர விஷயங்கள் அதிகரிப்பதே இதற்கு காரணம்.

மாரி.பி, மானுார், திருநெல்வேலி: என் தந்தை கட்டிய முருகன் கோயிலில் சொற்பொழிவாற்ற ஆசை. என்ன செய்ய...

முருகப்பெருமான், பெற்றோரை வணங்கி இன்றே தொடங்குங்கள். நல்லதே நடக்கும்.

குமரன்.எம், தாராபுரம்,திருப்பூர்: சமுதாயத்தில் மதிப்பு அதிகரிக்க…

அன்பு, எளிமை, கருணை, பொறுமை தேவை.

முருகன்.எஸ், அய்யாத்தோப்பு, கன்னியாகுமரி: சொத்து வழக்கில் தீர்வு கிடைக்க...

செவ்வாய் தோறும் விநாயகரை வழிபடுங்கள்.

ராஜன்.இரா,திருநள்ளாறு, புதுச்சேரி: புரட்டாசி சனிக்கிழமை அன்று பெருமாளுக்கு என்ன சிறப்பு?

புரட்டாசியில் சனிக்கிழமையும், திருவோணமும் சேர்ந்த நாளில் தான் ஏழுமலையான் அவதரித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us