ADDED : அக் 08, 2026 01:54 PM

ஷாந்திரி.எம், நாகர்கோவில்: கொலு வைக்காவிட்டால்...
ஒன்பது நாளும் துர்கை, லட்சுமி, சரஸ்வதிக்கு பூ வைத்து சுண்டல் நைவேத்யம் செய்யுங்கள்.
புவனேஸ்வரி.பி, சென்னை: சேலை கட்டும் கிருஷ்ணர் எங்கிருக்கிறார்?
உடுப்பி (கர்நாடகா) கிருஷ்ணருக்கு நவராத்திரியின் போது சேலை அணிவிக்கின்றனர்.
சுரேஸ்வரி.எல், மதுரை: நவராத்திரியின் போது சொல்ல வேண்டிய மந்திரம்...
ஓம் ஸ்ரீலலிதா தேவியே நம' என 108 முறை சொல்லுங்கள்.
லோகேஸ்வரி.எஸ், காஞ்சிபுரம்: கொலு வைப்பது ஏன்?
எல்லா உயிர்களும் அம்பிகையின் அம்சம். அதற்காக கொலு வைக்கிறோம்.
கருணாகரி.ஆர், பெங்களூரு: வடஇந்தியாவில் துர்கை சிலையை கங்கையில் கரைப்பார்களாமே...
நவராத்திரி முடிந்ததும் இமயமலைக்கு துர்கை செல்கிறாள். அவளை வழியனுப்பும் விதத்தில் கங்கையில் கரைக்கிறார்கள்.
மனோகரி.பா, புதுச்சேரி: நவராத்திரியில் பாடுவது கட்டாயமா...
பாட்டை விரும்புபவள் அம்பிகை. நீங்களும் பாடலாமே.
ஹரிணி.டி, கோவை: ஏன் சரஸ்வதி பூஜை...
கல்விக்கும், தொழிலுக்கும் ஆதாரமான புத்தகம், கருவிகளை வழிபடுவதற்காக.
காயத்ரி.எஸ், தென்காசி: நவராத்திரி விரதம் முதலில் இருந்தவர் யார்?
ராமர். இந்த விரதம் பற்றி அகத்தியர் மூலம் அறிந்து, சீதையை மீட்டார்.
மயூரி.கே, திண்டுக்கல்: புரட்டாசியில் நவராத்திரி கொண்டாடுவது ஏன்?
புதனுக்கு உரியது கன்னி ராசி. புரட்டாசியில் கன்னி ராசியில் இருக்கும் சூரியன் நன்மையை தருவார். அதனால் கொண்டாடுகிறோம்.
