தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : அக் 08, 2026 02:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2026 02:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அக்.9 புரட்டாசி 22: மாத சிவராத்திரி. விஷசஸ்திர ஹத மஹாளயம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருநெல்வேலி நெல்லையப்பருக்கும், காந்திமதியம்மனுக்கும் தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனம். அழகர்கோவில்சுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. திருவிடைமருதுார் பிரகத்குசாம்பிகை பவனி.

அக்.10 புரட்டாசி 23: மகாளய அமாவாசை. மாஷா கவுரி விரதம். ஸ்ரீரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், மதுரை கூடலழகர் திருமஞ்சனம். பாபநாசம், குற்றாலம் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம். சிருங்கேரி சாரதாம்பாள் அபிஷேகம்.

அக்.11 புரட்டாசி 24: நவராத்திரி ஆரம்பம். மதுரை மீனாட்சி அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரம். குலசேகரப்பட்டினம் முத்தாலம்மன் சிம்மவாகனம். காஞ்சிபுரம் காமாட்சியம்மன், மதுரை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் அலங்காரம்.

அக்.12 புரட்டாசி 25: சந்திர தரிசனம்.தனவிருத்தி கவுரிவிரதம். ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார் புறப்பாடு. கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சன்னதியில் கருடாழ்வார் திருமஞ்சனம்.

அக்.13 புரட்டாசி 26: மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக காட்சி. அகோபிலமடம் 33வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு. திருப்பரங்குன்றம் முருகன் பவனி. குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு. திருமலைநம்பி திருநட்சத்திரம்.

அக்.14 புரட்டாசி 27: சதுர்த்தி விரதம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம். தேரெழுந்துார் ஞானசம்பந்தர் புறப்பாடு.

அக்.15 புரட்டாசி 28: சிருங்கேரி சாரதாம்பாள் மோகினி அலங்காரம். அகோபிலமடம் 1வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம். சுவாமிமலை முருகன் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us