ADDED : அக் 15, 2026 01:30 PM

கனகா.வி, குரோம்பேட்டை, சென்னை: சகலகலாவல்லி மாலையை தினமும் படித்தால்...
சரஸ்வதி அருளால் கேட்ட வரம் கிடைக்கும்.
ரெங்கசாமி.ஏ, பெங்களூரு: சரஸ்வதி பூஜையில் வைத்த புத்தகங்களை எப்போது படிக்கலாம்?
பள்ளி, கல்லுாரிக்குச் சென்று விஜயதசமி அன்று படியுங்கள். (ஆனால் நாமோ விடுமுறையாக்கி வீணாக்குகிறோமே)
சாய்ராம்.த, காமராஜ் நகர், கடலுார்: விஜயதசமி அன்று கோயிலில் அம்பு விடுவது ஏன்?
எட்டுத் திசையில் இருந்தும் வெற்றி நம்மைச் சேர...
முருகன்.ஏ, திருமங்கலம், மதுரை: அட்சர அப்யாசம் என்றால்...
விஜயதசமியன்று குழந்தைகளுக்கு எழுத்துப் பயிற்சியை தொடங்குவது. (அட்சரம் - எழுத்து, அப்யாசம் - பயிற்சி)
கோபி.ஆர், புல்லரம்பாக்கம், திருவள்ளூர்: *சரஸ்வதி பூஜையன்று தட்சிணாமூர்த்தி, ஹயக்ரீவரை வழிபடலாமா?
கடவுளை அறியும் அறிவு(ஞானம்), புத்தக அறிவை பெற இவர்களை வழிபடலாம்.
குமார்.கோ, ராதாபுரம், கன்னியாகுமரி: *சரஸ்வதிக்கு ஏன் வெள்ளை நிறம்?
உண்மை, நேர்மை, ஒழுக்கம், அறிவு, துாய்மை போன்ற பண்புகளின் அடையாளம் வெள்ளை.
தேவகி.மா,நேதாஜிபுரம், கோவை: *விஜயதசமி அன்று வன்னி மரத்தை வழிபட்டால்...
எதிர்மறை ஆற்றல் மறையும். வெற்றி, மகிழ்ச்சி கிடைக்கும்.
கற்பகம்.கே, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி: *அரிசியில் ஏன் எழுதுகிறார்கள்?
அழியாத செல்வம் கல்வி; செல்வத்தின் அடையாளம் அரிசி. அதனால் அரிசியில் எழுதுகிறோம்.
முத்து.பி, நாகல்நகர், திண்டுக்கல்: *சுயம்பு முகூர்த்த நாள் எது?
விஜயதசமி. தோஷமே இல்லாத இந்த நாளில் புதிய முயற்சியில் ஈடுபடுங்கள்.
