தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : நவ 20, 2026 08:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2026 08:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவ.20 கார்த்திகை 4: முகூர்த்த நாள். ஏகாதசி விரதம். வள்ளியூர் முருகப்பெருமான் திருக்கல்யாணம். ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருமஞ்சனம். அகோபிலமடம் 45வது பட்டம்

அழகியசிங்கர் திருநட்சத்திரம். திருப்பதி பெருமாள் மைசூரு மண்டபம் எழுந்தருளல்.

நவ.21 கார்த்திகை 5: சிலுகத்துவாதசி. ஷீராப்தி பூஜை. திருவண்ணாமலை அண்ணாமலையார் தேர். திருப்பரங்குன்றம் முருகன் மயில் வாகனம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் வரதராஜர் திருமஞ்சனம்.

நவ.22 கார்த்திகை 6: பிரதோஷம். சுவாமிமலை முருகன் காமதேனு வாகனம். சகல சிவன் கோயில்களில் மாலையில் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம். திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மனுக்கு தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனம்.

நவ.23 கார்த்திகை 7: பிருந்தாவன பூஜை. பரணி தீபம். திருப்பரங்குன்றம் முருகன் பட்டாபிஷேகம். திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் தலங்களில் 1008 சங்காபிஷேகம். புட்டபர்த்தி சாய்பாபா பிறந்த நாள். கரிநாள்.

நவ.24 கார்த்திகை 8: பவுர்ணமி. திருக்கார்த்திகை. கார்த்தீக கவுரி விரதம். துளசி விரதம். பாஞ்சராத்திர தீபம். லட்சுமி பூஜை. குருநானக் ஜெயந்தி. வாஸ்து நாள். காலை 11:29 - 12:05 மணி வரை கிணறு, மனை, மடம், கோயில் வாஸ்து செய்ய நன்று. திருவண்ணாமலை அண்ணாமலையார் ஜோதி தரிசனம். பழநி முருகன், நத்தம் மாரியம்மன் லட்ச தீபக் காட்சி. அகோபிலமடம் 5வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். கணம்புல்ல நாயனார் குருபூஜை. திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம்.

நவ.25 கார்த்திகை 9: மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு. ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பாலாபிஷேகம். திருப்பாணாழ்வார் திருநட்சத்திரம்.

நவ.26 கார்த்திகை 10: சுவாமிமலை முருகன் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி பெருமாள் புஷ்பாங்கி சேவை. கரிநாள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us