தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : அக் 15, 2026 01:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 15, 2026 01:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அக்.16 புரட்டாசி 29: சஷ்டி விரதம். உபாங்கலலிதா கவுரி விரதம். மதுரை வீரராகவப்பெருமாள், அருப்புக்கோட்டை சவுடாம்பிகை அம்மன், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரம். அஹோபிலமடம் 20வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். கரிநாள்.

அக்.17 புரட்டாசி 30: மதுரை மீனாட்சி அம்மன் தண்ணீர் பந்தலில் அருளிய காட்சி. சிருங்கேரி சாரதாம்பாள் ராஜராஜேஸ்வரி அலங்காரம். ஸ்ரீவில்லிபுத்துார் சமீபம் திருவண்ணாமலை சீனிவாசப்பெருமாள் கருட வாகனத்தில் பவனி.

அக்.18 ஐப்பசி 1: விஷூ புண்ணிய காலம். துர்காஷ்டமி. சதாபிேஷக ஸ்நானம். குலசேகரப்பட்டினம் முத்தாலம்மன் கமல வாகனத்தில் கஜலட்சுமி கோலம். ராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி சிறப்பு அலங்காரம். தேவகோட்டை மணிமுத்தா நதிக்கு அவ்வூர் சகல கோயில் மூர்த்திகளும் எழுந்தருளி வீஷூ உற்ஸவ தீர்த்தவாரி. உத்திரமாயூரம் வள்ளலார் சன்னதியில் சந்திரசேகரர் புறப்பாடு.

அக்.19 ஐப்பசி 2: திருவோண விரதம். மஹா நவமி. சரஸ்வதி, ஆயுத பூஜை. காலை 10:00 - 10:30 மணி. மதுரை மீனாட்சி அம்மன் சிவபூஜை செய்தல். திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்ஸவம்.

அக்.20 ஐப்பசி 3: விஜய தசமி. தசரத லலித கவுரி விரதம். ஸ்ரீவில்லிபுத்துார் பெரியபெருமாள், ஒப்பிலியப்பன் கோவில் சீனிவாசப்பெருமாள் பவனி. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 108 வீணை கச்சேரி. அழகர்கோவில் கள்ளழகர் தங்கக்குதிரை வாகனம். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் அம்பு விடும் காட்சி. ஷீரடி சாய்பாபா ஸித்தி தினம்

அக்.21 ஐப்பசி 4: துளசி கவுரி விரதம். சிருங்கேரி சாரதாம்பாள் தேர். அழகர்கோவில் கள்ளழகர் தைலக்காப்பு உற்ஸவம். பூதத்தாழ்வார் திருநட்சத்திரம்.

அக்.22 ஐப்பசி 5: ஏகாதசி விரதம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ராஜராஜச் சோழன் 1041வது சதய விழா. பேயாழ்வார் திருநட்சத்திரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us