தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/தெரியுமா உங்களுக்கு...

தெரியுமா உங்களுக்கு...

தெரியுமா உங்களுக்கு...


ADDED : அக் 16, 2026 07:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2026 07:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* சரஸ்வதி ஏந்திய வீணை கச்சபி. இதைக் கொடுத்தவர் சிவபெருமான்.

* சரஸ்வதியின் வாகனம் அன்னம், மயில்.

* விஜயதசமி அன்று தொடங்கும் செயல் வெற்றி பெறும். அதனால் தான் குழந்தைகளுக்கு அட்சர அப்பியாசத்தை விஜயதசமி அன்று ஆரம்பிப்பர்.

* புலவர்கள், கல்வியாளர், தங்களின் வீட்டிற்கு வாக்தேவி நிலையம், கலைமகள் நிலையம், வாணி விலாசம், சரஸ்வதி பவனம் என சரஸ்வதியின் பெயரைச் சூட்டுவது வழக்கம்.

* நுாலகத்தை 'சரஸ்வதி பண்டாரம்' என்பர். பண்டாரம் என்றால் 'கருவூலம்' என பொருள். தஞ்சை சரபோஜி மன்னர் நுால்களை சேகரித்து வைத்த இடம் 'சரஸ்வதி மகால்' எனப்படுகிறது.

* நுால்களை இடது கையால் எடுப்பது, காலால் மிதிப்பது, தலைக்கு வைத்து படுப்பது கூடாது. மீறி செய்தால் புத்திசாலித்தனம் குறையும். குழப்பம் அதிகரிக்கும். பாவம் சேரும்.

* வைணவ குரு ராமானுஜரின் அறிவாற்றலை பாராட்டி 'ஸ்ரீபாஷ்யக்காரர்' என பட்டம் அளித்தாள் சரஸ்வதி. பல நுால்களுக்கு உரை எழுதியதால் ஏற்பட்ட பெயர் இது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us