ADDED : அக் 22, 2026 12:01 PM

ராகவி.எம், கல்யாண்புரி, டில்லி: *லாபம் அதிகரிக்க...
வியாபாரிகள் அன்னாபிஷேகத்தை தரிசித்தால் லாபம் அதிகரிக்கும்.
சொக்கர்.ஏ, திருவான்மியூர், சென்னை:*அன்னம் (உணவு) பற்றி வேதத்தில் உள்ளதா...
அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னாதோ' என்கிறது சாமவேதம். அன்னத்தின் வடிவமே கடவுள்.
கவிதா.ரா, கல்லுப்பட்டி, மதுரை: *'சோற்றிலே இருக்காரு சொக்கநாதர்' என்கிறார்களே...
பசியால் வாடுபவருக்கு உணவே கடவுள்.
குமார்.கே, வண்டலுார், காஞ்சிபுரம்L *அம்மனுக்கு அன்னாபிேஷகம் உண்டா...
காஞ்சி காமாட்சிக்கும், சென்னை மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மனுக்கும் ஐப்பசியில் நடக்கிறது.
லிங்கம்.ஆர், வீரபாண்டி, தேனி: *அபிஷேகம் செய்த அன்னத்தை என்ன செய்வர்?
விலங்குகள், பறவைகள், பக்தர்களுக்கு பிரசாதமாக தருவர்.
தன்யா.ஸ்ரீ, குளச்சல், கன்னியாகுமரி: அன்னாபிேஷகத்திற்கு அரிசி கொடுத்தால்...
நல்ல உணவு, அதிக லாபம், மோட்சம் கிடைக்கும்.
குமரன்.எம், பல்லடம் திருப்பூர்: *ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடத்துவது ஏன்?
அறுவடை செய்த நெல்லை(அரிசி) சமைத்து கடவுளுக்கு நன்றி செலுத்தும் நிகழ்ச்சி இது.
திருமலை.பா, வல்லம், தென்காசி: *சிதம்பரம் கோயிலில் தினமும் அன்னாபிேஷகம் நடக்குமாமே...
ஆம். தினமும் காலை 11:00 மணிக்கு ரத்தின சபாபதிக்கு மட்டும் அன்னாபிஷேகம் நடக்கும்.
கோபி.எஸ், வில்லியனுார், புதுச்சேரி: *தானத்தில் சிறந்தது எது... ஏன்?
அன்னதானம். பசித்தவனுக்கு உணவு கொடுப்பது உயிரைக் கொடுப்பதற்கு சமம்.
