ADDED : அக் 15, 2026 01:34 PM
அ நிறம் | அளவு
* வெண்பட்டு உடுத்தி வெள்ளை தாமரையில் வெள்ளை அன்னப் பறவை மீது அமர்ந்து சரஸ்வதி அருள்புரிகிறாள். அவளுக்கு பிடித்த நிறம் வெள்ளை.
* வேதங்களில் முதன்மையான ரிக் வேதத்தில் சரஸ்வதி வழிபாடு உள்ளது.
* குமரகுருபரர் பாடிய பாடல் 'சகலகலாவல்லி மாலை'. இதை தினமும் பாடினால் கலைகளில் தேர்ச்சி பெறுவர்.
* சரஸ்வதிக்கு வாகீஸ்வரி (சொல்லுக்கு தலைவி), வாக்தேவி, ஜ்யோதி ஸ்வரூபா, வாஜினீவதி, ருதாவரி, பிராஹ்மி (பிரம்மாவின் மனைவி) என பல பெயர்கள் உண்டு.
* கவி காளிதாசர் வழிபட்ட சங்கீத தேவதை ராஜமாதங்கி. இவள் வீணை இசைக்கும் அம்பிகை.
* ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியில் 'நாமகள் இலம்பகம்' என்ற பகுதி சரஸ்வதியை புகழ்கிறது.
* திருவாரூர் மாவட்டம் கூத்தனுாரில் சரஸ்வதி கோயில் உள்ளது.
* ஒன்பது புனித நதிகளில் நான்காவது நதி சரஸ்வதி.
