
செப்.20 புரட்டாசி 4 : பிரகதீ கவுரி விரதம். ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் தங்க பல்லக்கில் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதி அம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருவிடைமருதுார் பிரகத்குசாம்பிகை புறப்பாடு. ருத்திரபசுபதியார் குருபூஜை.
செப்.21 புரட்டாசி 5: மஹாபரணி. சங்கடஹர சதுர்த்தி. ஸ்ரீரங்கம் நம்பெருமான், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம். திருப்போரூர் முருகப்பெருமான் பால் அபிஷேகம்.
செப்.22 புரட்டாசி 6: கார்த்திகை விரதம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். திருப்பரங்குன்றம் முருகன் தங்க மயில் வாகனம். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
செப்.23 புரட்டாசி 7: கீழ் திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சன்னதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநாளைப்போவார் நாயனார் குருபூஜை.
செப்.24 புரட்டாசி 8: சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி பால் அபிஷேகம்.
செப்.25 புரட்டாசி 9: மத்யாஷ்டமி. லட்சுமி பூஜை. மஹா வியதிபாதம். ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் உடையவர் கூட புறப்பாடு.
செப்.26 புரட்டாசி 10: அவிதவா நவமி. சுவாமிமலை முருகப்பெருமான் வைரவேல் தரிசனம். பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு. திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.