
மா.திவ்யஸ்ரீ, ராமமூர்த்தி நகர், பெங்களூரு: வேண்டுதல் வைத்ததும் நேர்த்திக்கடன் செலுத்தணுமா...
உடனடியாக நேர்த்திக்கடனை செலுத்துங்கள். வேண்டுதல் நிறைவேறிய பின் செலுத்துவதில் தவறில்லை.
ரா.ரவி, கடையநல்லுார், தென்காசி: அமாவாசை அன்று என்ன செய்யலாம்...
முன்னோருக்கு திதி கொடுங்கள்.
கோயிலுக்கு செல்வதோடு அன்னதானமும் செய்யுங்கள்.
ஆ. பிரவீணா, கல்யாண்புரி, டில்லி: முன்னோர் படத்திற்கு தினமும் பூக்கள் சாத்தணுமா?
உங்கள் இஷ்டம். ஆனால் அமாவாசை அன்று கட்டாயம் சாத்துங்கள்.
ரெ. நடராஜர், சிதம்பரம், கடலுார்: பறவைகளுக்கு தானியம் கொடுத்தால்…
நம் பிரச்னை தீரும்.
மா.முருகன், கணபதிபுரம், கோயம்புத்துார்: தேனீ கூடு கட்டுவது நல்ல சகுனமா...
நல்ல சகுனம். முடிந்தவரை அதைக் கலைக்காதீர்கள்.
வி. நயினார், உத்திரகோசமங்கை, ராமநாதபுரம்: மாடியில் வசிப்பவர்கள் கோலமிடுவது கட்டாயமா?
வீட்டிற்குள் எப்படி நுழைவீர்கள்? வாசல் வழியாகத் தானே...
எம். பாலமுரளி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்: தீபத்தை குழந்தை ஊதி அணைத்து விட்டது. தோஷம் வருமா?
குழந்தை தானே... தோஷம் வராது.
பு.வனஜா, குளச்சல், கன்னியாகுமரி: குழந்தை பேறு கிடைக்க எந்த பதிகம் படிக்க வேண்டும்?
திருவெண்காடு பதிகத்தை தினமும் படியுங்கள்.
தா.அறிவழகன், வில்லிவாக்கம், சென்னை: கணவரால் கைவிடப்பட்ட பெண் எந்த வீட்டுக்குலதெய்வத்தை வழிபடணும்?
அவரவர் விருப்பம் போல பிறந்த வீடு, புகுந்த வீட்டு தெய்வத்தை வழிபடலாம்.