
எம்.சங்கீதா, ராயபுரம்,சென்னை: *எந்த கிழமை... என்ன ஆடை?
ஞாயிறு, செவ்வாய் - இளஞ்சிவப்பு
திங்கள், வெள்ளி - வெள்ளை
புதன் - பச்சை
வியாழன் - மஞ்சள்
சனி - கருநீலம்
ஆர்.ஸ்ரீலதா, உத்தமபாளையம், தேனி: *நவக்கிரகத்திற்கும், சனிக்கிழமைக்கும் என்ன தொடர்பு?
நீண்டகால பாதிப்பை ஏற்படுத்துவது சனி கிரகம். இதனால் சனிக்கிழமை நவக்கிரகத்தை வழிபடுகிறோம்.
ஆர்.வினிதா, தோவாளை, கன்னியாகுமரி: *குழந்தைக்கு இரட்டை சுழி இருந்தால்....
சுட்டித்தனம், சுறுசுறுப்பு, செயல்திறன் அதிகரிக்கும். இது மகிழ்ச்சியான விஷயமே...
ஆர்.ஸ்வேதா, காரைக்கால், புதுச்சேரி: *திருமண பேச்சை ஆடியில் ஆரம்பிக்கலாமா?
ஆரம்பிக்கலாம். அப்போது தான் ஆவணியில் திருமணம் நடக்கும்.
பா.சரிதா, ராஜபாளையம், விருதுநகர்: *ஒரே நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்யலாமா?
நடத்தலாம். இருவருக்கும் ஒரே தசாபுத்தியாக இருந்தால் திருமணம் செய்ய வேண்டாம்.
ஆர்.அமுதா, வேட்டைக்காரன்புதுார், கோயம்புத்துார்: *மணமக்களுக்கு கங்கணம் கட்டுவது ஏன்?
மணிக்கட்டில் கட்டும் கயிறு தான் கங்கணம். இதனால் நோய், விபத்து, தடை ஏற்படாது.
கே.நிவேதா, ஸ்ரீமுஷ்ணம், கடலுார்: *அம்மன் கோயிலில் ஆயிரம் துளை இட்ட பானை எடுப்பது ஏன்?
அப்பானையில் விளக்கேற்றி வழிபட்டால் நோய் தீரும்.
டி.கவிதா, களக்காடு, திருநெல்வேலி: *கடனால் சிரமப்படுகிறேன். விடுபட...
சிக்கனமாக இருங்கள். திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள ருணவிமோசன (கடன் தீர்ப்பவர்) சுவாமியை தரிசியுங்கள்.
எஸ்.அபிதா, பசவன்குடி, பெங்களூரு: *கருவறை தீபத்தில் எண்ணெய் சேர்த்தால்...
நிம்மதி கிடைக்கும். வறுமை நீங்கும்.