
டி.வரதராஜன், நங்கநல்லுார், சென்னை: புண்ணியம் கிடைக்க...
பசுவுக்கும், பசித்தவருக்கும் உணவு கொடுங்கள். கோயிலில் தொண்டு செய்யுங்கள். நல்லதை பேசுங்கள்.
ரா.சந்திரிகா, குன்னுார், நீலகிரி: பிறர் முன்னிலையில் உதவி செய்தவரை பாராட்டலாமா?
பாராட்டுவது கட்டாயம். இதில் என்ன சந்தேகம்?
எஸ்.தினகரன், அவனியாபுரம், மதுரை: சம்பாதிப்பதற்கு பிறர் சொல்லும் யோசனையை கேட்கலாமா...
உண்மையாக இருந்தால் கேட்கலாம். சரி என மனதிற்கு தோன்றுவதை பின்பற்றுங்கள்.
எஸ்.கண்ணன், நெய்வேலி, கடலுார்: மன்மதன் என்பவர் யார்?
எல்லா உயிர்களுக்கும் காதல் உணர்வை துாண்டுபவர்.
ஆதி.சங்கர், முறப்பநாடு, துாத்துக்குடி: யாகத்தீயில் இடும் பொருட்களுக்கு(திரவியம்) எண்ணிக்கை உண்டா?
27 அல்லது 54 அல்லது 108.
செ.சேஷாத்திரி, பெங்களூரு: பத்ததி என்றால்...
பத்ததி என்றால் 'வழி'. வேதம், ஆகம நெறிமுறைகளை விளக்குவது இது.
டி.பொன்விழி, அன்னுார், கோயம்புத்துார்: தானத்தில் சிறந்தது நிதானமா...
தானம் என்றால் கொடுப்பது; நிதானம் என்றால் விட்டுக்கொடுப்பது. இரண்டும் இருந்தால் அங்கு நிம்மதி இருக்கும்.
ஆர்.ரங்கசாமி, வடுகபட்டி, தேனி: அநியாயமாக வந்த சொத்தை அனுபவிக்கலாமா...
கூடாது. பாவம் தொடரும்.
எஸ்.வளர்மதி, கொட்டாரம், கன்னியாகுமரி: கால் ஆட்டியபடி உட்காராதே என வீட்டில் திட்டுகிறார்களே... ஏன்?
ஆணவம், மரியாதைக் குறைவான செயலை செய்ய வேண்டாமே.

