sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : டிச 15, 2023 10:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2023 10:56 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்.இந்துமதி, பெதப்பம்பட்டி, திருப்பூர்.

*விரதமிருக்கும் தாயாரை திட்டி விட்டேன். பரிகாரம் உண்டா?

தாயாரை வருந்தச் செய்வது பாவம். அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேளுங்கள். அதோடு அவர் இருக்கும்வரை பணிவிடை செய்யுங்கள்.

கே.முருகன், ஸ்ரீவைகுண்டம், துாத்துக்குடி.

*உடல் பலத்தை விட மன அடக்கம் சிறந்ததா...

மனக்கட்டுப்பாடுடன் வாழ்வதே வீரம். ஆனால் அனுமன் போல செயல் வீரனாக மாறுவது என்பது அரிய செயல்.

பி.விஜய்பாரதி, ஹலசூரு, பெங்களூரு.

*குபேரனுக்கு எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்?

வெண்கலம் அல்லது தங்கத்தால் ஆன ஏழு விளக்குகள் ஏற்றுவது நல்லது.

ஆர்.வினோதா, சிங்கம்புணரி, சிவகங்கை.

*விநாயகருக்கு சிதறுகாய் உடைக்க கொடுத்ததை, என் மகன் பசியால் வாடும் ஒருவருக்கு கொடுத்து விட்டான். சரிதானா?

பசி போக்க விநாயகரே நேரில் வந்து தங்கள் மகனிடம் பெற்றதாக எண்ணுங்கள்.

கே.வத்சலா, சிதம்பரம், கடலுார்.

*விநாயகர், அனுமனை சனி பிடிக்கவில்லையாமே...

முதல் கடவுளான விநாயகரின் அருள்பலம், அனுமனின் தவபலமே இதற்கு காரணம். இவர்களை வழிபட கிரக தோஷம் நெருங்காது.

ஆர்.மோகனா, துவாரகா, டில்லி.

*அருணோதயம், சூரியோதயம் இரண்டும் ஒன்றா...

இல்லை. சூரியன் உதிக்கும் முன்பாக வானம் சிவந்திருக்கும். அது அருணோதயம். சூரியன் உதிப்பது (கண்ணுக்குத் தெரிவது) சூரியோதயம்.

எம்.கணேஷ், பிராட்வே, சென்னை.

*அமாவாசையன்று குழந்தை பிறந்தால்...

குழந்தை பிறப்பு இயற்கையானது. அதனால் அமாவாசை தோஷம் கிடையாது. பிறப்புக்கும், இறப்புக்கும் ஆதாரமாக இருப்பவர் கடவுள்.

கே.கண்ணன், திங்கள்நகர், கன்னியாகுமரி.

*குருபக்தியால் நற்கதியடைந்தோர் யார்?.

குருநாதர் - சீடர்கள்

ஆதிசங்கரர் - தோடகாசாரியார்

ராமானுஜர் - கூரத்தாழ்வார்

இவர்களைப் போல இன்னும் பலர்.

கே.சந்தோஷ், நத்தம், திண்டுக்கல்.

*பிரதட்சிணம், அங்கப் பிரதட்சிணம் - விளக்கம்.

சன்னதியை வலம் வருவது பிரதட்சிணம். தரையில் உருண்டபடி செல்வது அங்கப்பிரதட்சிணம். இரண்டுமே புண்ணியம் தரும்.

எஸ்.கவிதா, ஆலந்துார், செங்கல்பட்டு.

*கோள் தீர்த்த விநாயகரின் சன்னதி எங்குள்ளது?

நவக்கிரகத் தலங்களில் ஒன்றான சூரியனார் கோவிலில்(தஞ்சாவூர் மாவட்டம்) உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us