
மார்ச் 1 மாசி 18: முகூர்த்த நாள். தேய்பிறை சஷ்டி விரதம். கோயம்புத்துார் கோனியம்மன் இந்திர விமானத்தில் தெப்போற்ஸவம். ராமேஸ்வரம் ராமநாதர் உற்ஸவம் ஆரம்பம். காங்கேயம் முருகப்பெருமான் லட்ச தீபக்காட்சி. திருவாரூர் தியாகராஜர் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
மார்ச் 2 மாசி 19: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனம், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனம். திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாள் இத்தலங்களில் திருமஞ்சனம்.
மார்ச் 3 மாசி 20: திருக்கோகர்ணம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர் இத்தலங்களில் உற்ஸவம் ஆரம்பம். சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அவதார தினம்.
மார்ச் 4 மாசி 21: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் மூலவருக்கு திருமஞ்சனம். திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம்.
மார்ச் 5 மாசி 22: வாஸ்துநாள் காலை 10:32 - 11:08 மணி பூஜை நேரம். சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் நாமாவளி கொண்ட தங்கபூமாலை சூடியருளல். ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு. காரி நாயனார் குருபூஜை.
மார்ச் 6 மாசி 23: ஏகாதசி விரதம். ஸ்ரீசைலம், திருவாரூர் தலங்களில் சிவபெருமான் புறப்பாடு. ராமநாதபுரம் செட்டி தெரு முத்தாலம்மன் பவனி. ஸ்ரீரங்கம் நம்பெருமான் சந்தன மண்டபம் எழுந்தருளி திருமஞ்சனம். அழகர்கோவில் கள்ளழகர் புறப்பாடு. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
மார்ச் 7 மாசி 24: முகூர்த்த நாள். திருவோண விரதம். காளஹஸ்தி, திருவைக்காவூர், திருவாரூர் தலங்களில் சிவபெருமான் பவனி.