
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகாசிவராத்திரியன்று திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் பாடிய பாடல்களை பாடுங்கள். சிவனருளால் புண்ணியம் சேரும்.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தன் இணையடி நீழலே.
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
எத்தாலும் மறவாதே நினைக்கின்றேன்
மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால்
வெண்ணெய் நல்லுார் அருட்துறையுள்
அத்தா உனக்காளாய் இனி அல்லேன்
எனல் ஆமே.
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்கஇமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்
தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க.