
மார்ச் 15 பங்குனி 2: சஷ்டி, கார்த்திகை விரதம். திருப்பரங்குன்றம் முருகப்பெருமான், சென்னை மல்லீஸ்வரர் உற்ஸவம் ஆரம்பம். திருத்தணி முருகப்பெருமான் கிளிவாகனம். ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல். திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மன் திருமஞ்சனம்.
மார்ச் 16 பங்குனி 3: மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு. திருச்சி தாயுமானவர், கழுகுமலை முருகன், கங்கை கொண்டான் வைகுண்டபதி, திருச்சுழி திருமேனிநாதர், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர், திருப்புவனம் சிவன் தலங்களில் உற்ஸவம் ஆரம்பம். வடபழநி மந்திராலயம் ராகவேந்திரருக்கு பால், பஞ்சாமிர்த அபிஷேகம்.
மார்ச் 17 பங்குனி 4: பரமக்குடி அன்னை முத்தாலம்மன், ஸ்ரீவில்லிபுத்துார் சுவாமி பெரிய பெருமாள், திருப்புல்லாணி ஜெகந்நாதப்பெருமாள் உற்ஸவம் ஆரம்பம். திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்கக்குதிரை வாகனம்.
மார்ச் 18 பங்குனி 5: ராமகிரிப்பேட்டை கல்யாண நரசிங்கப்பெருமாள் உற்ஸவம் ஆரம்பம், கங்கை கொண்டான் வைகுண்டபதி சிறிய திருவடியில் பவனி, காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் அதிகார நந்தி வாகனம், கணநாத நாயனார் குருபூஜை.
மார்ச் 19 பங்குனி 6: திருச்சி தாயுமானவர் கைலாச பர்வத வாகனம், கழுகுமலை முருகப்பெருமான் காமதேனு வாகனம், கரிநாள்.
மார்ச் 20 பங்குனி 7: முகூர்த்த நாள், திருப்புல்லாணி ஜெகந்நாதப் பெருமாள் பட்டாபிராம உபய கருட சேவை. திருச்சுழி திருமேனிநாதர் கற்பக விருட்சம், மதுரை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கல்யாணம், முனையடுவார் நாயனார் குருபூஜை.
மார்ச் 21 பங்குனி 8: பழநி முருகன் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனம். ஸ்ரீவில்லிப்புத்துார் ஆண்டாள் ஹம்ஸ வாகனம், ரங்கமன்னார் கருட வாகனம். திருப்புல்லாணி ஜெகந்நாதப் பெருமாள் புன்னைமர வாகனம். ராமகிரி கல்யாணநரசிங்கப் பெருமாள் கருட வாகனம்.