sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சுட்டிக்குழந்தை வந்தாச்சு!

/

சுட்டிக்குழந்தை வந்தாச்சு!

சுட்டிக்குழந்தை வந்தாச்சு!

சுட்டிக்குழந்தை வந்தாச்சு!


ADDED : மே 24, 2024 09:29 AM

Google News

ADDED : மே 24, 2024 09:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குழந்தையின் பிஞ்சுக் கையால் கூழ் சாப்பிடுவது அமிர்தம் என்கிறார் திருவள்ளுவர். ஆனால் சிலர் இந்த வாய்ப்பு இல்லாமல் ஏங்குகின்றனர். இக்குறை தீர திருவெண்காட்டு பதிகத்தை பாடியுள்ளார் திருஞானசம்பந்தர். தினமும் இதை படித்தால் வீட்டில் குழந்தை தவழ்வது நிச்சயம்.

கண் காட்டும் நுதலானும் கனல் காட்டும் கையானும்

பெண் காட்டும் உருவானும் பிறை காட்டும் சடையானும்

பண் காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும்

வெண் காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே.

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ளம் நினைவு ஆயினவே வரம் பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும்

வேயன தோளுமை பங்கன் வெண்காட்டு முக்குள நீர்

தோய் வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே.

மண்ணொடு நீர் அனல் காலோடு ஆகாயம் மதி இரவிஎண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண்திசையும்

பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையுமா பேராளன்

விண்ணவர்கோன் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே.

விடமுண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின் தண்புறவின்மடல்விண்ட முடத்தாழை மலர் நிழலைக் குருகென்று

தடம்மண்டு துறைக் கெண்டை தாமரையின் பூமறையக்

கடல்விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே.

வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ் மாலைமலி வண் சாந்தால் வழிபடு நல் மறையவன் தன்

மேலடர் வெங்காலன் உயிர் விண்ட பினை நமன் துாதர்

ஆலமிடற்றான் அடியார் என்று அடர அஞ்சுவரே.

தண்மதியும் வெய்யரவும் தாங்கினான் சடையினுடன்ஒண்மதிய நுதலுமையோர் கூறு உகந்தான் உறை கோயில்

பண்மொழியால் அவன் நாமம் பல ஓத பசுங்கிள்ளை

வெண்முகில் சேர் கரும்பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே.

சக்கரம் மாற்கு ஈந்தானும் சலந்தரனைப் பிளந்தானும்அக்கரை மேலசைத்தானும் அடைந்து அயிராவதம் பணிய

மிக்கதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும் வினை துரக்கும்

முக்குளம் நன்கு உடையானும் முக்கணுடை இறையவனே.

பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்தஉன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள் செய்தான் உறை கோயில்

கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல் முழங்க

விண்மொய்த்த பொழில் வரிவண்டு இசை முரலும் வெண்காடே.

கள்ளார் செங்கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள்ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்

வெள்ளானை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று

உள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே.

போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்பேதையர்கள் அவர் பிரிமின் அறிவுடையீர் இது கேண்மின்

வேதியர்கள் விரும்பியசீர் வியன்திரு வெண்காட்டான் என்று

ஓதியவர் யாதுமொரு தீதுலர் என்று உணருமினே

தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ் ஞானசம்பந்தன் விண்பொலி வெண்பிறைச் சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்

பண்பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார்

மண்பொலிய வாழ்ந்தவர் போய் வான் பொலியப் புகுவாரே.






      Dinamalar
      Follow us