sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜூன் 21, 2024 12:36 PM

Google News

ADDED : ஜூன் 21, 2024 12:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமார், சிவகங்கை.

*உழைப்பின்றி சேர்த்த பணம்....

உழைப்பால் கிடைத்த பணம் நிற்கும். உழைக்காமல் வந்த பணம் வந்த வேகத்தில் மறையும்.

எம்.சண்முகப்பிரியா, குழித்துறை, கன்னியாகுமரி.

*முக்கனிகளால் அபிஷேகம் செய்வது ஏன்?

மா, பலா, வாழை. இவை மூன்றும் சிறந்தவை என்பதால் அபிஷேகம் செய்கிறோம்

கே.பாலச்சந்தர், பாரிமுனை, சென்னை.

*தலவிருட்சத்தில் என்ன நேர்த்திக்கடன் செய்யலாம்?

தலவிருட்சத்தை வழிபட்டால் போதும். பொம்மை, தொட்டில், துணியால் முடிச்சிடுவது, நுாலைச் சுற்றுவது கூடாது.

சி.சந்தோஷ், மதுக்கரை, கோயம்புத்துார்.

*திருமணம், அன்னதானத்தில் உணவு வீணாகிறதே...

உணவை வீணாக்குவது பாவம். தேவைக்கேற்ப உணவு தயாரியுங்கள்.

சி.சாய்சரண், ஏரோசிட்டி, டில்லி.

*பெருநெறி என்றால் என்ன?

எல்லா உயிர்களிடம் அன்பு செலுத்துவது பெருநெறி. ஆனால் நாம் மதம், ஜாதி, மொழி என குறுகிய வட்டத்திற்குள் வாழ்கிறோம்.

கே.மாலதி, மேகமலை, தேனி.

*48 நாள் விரதத்தில் அசைவம் சாப்பிடலாமா...

பாவம் போக்குவதே விரதம். அச்சமயம் அசைவம் சாப்பிடுவது கூடாது. மீண்டும் 48 நாள் விரதம் இருங்கள்.

எஸ்.புவனேஸ்வரி, ஒயிட்பீல்டு, பெங்களூரு.

*உறுப்பு தானத்தை ஹிந்து மதம் அனுமதிக்கிறதா?

அனுமதிக்கிறது. ஒருவர் தன் உறுப்பை மற்றொருவர் பயன்படுத்தும் விதத்தில் தானம் அளிப்பது சிறந்த பண்பு. தாராளமாக கொடுங்கள்.

ஆர்.ஆனந்தி, சன்யாசிகுப்பம், புதுச்சேரி.

*கவலையில் இருந்து மீள வழியுண்டா?

உலகின் உரிமையாளரான கடவுளைச் சரணடையுங்கள். கவலை வராது.

ஆர்.அபிதா, புவனகிரி, கடலுார்.

*எத்தனை நாளுக்கு ஒருமுறை மவுன விரதம் இருக்கலாம்?

காலையில் அரை மணி நேரம் மவுனமாக இருங்கள். செவ்வாய், வெள்ளி, பிரதோஷ நாட்களில் பேசாமல் இருப்பது நல்லது. இதனால் ஆத்ம பலம் அதிகரிக்கும்.

எம்.கே.மகாலட்சுமி, நடுவக்குறிச்சி, திருநெல்வேலி.

*சிதம்பரம் நடராஜர் கோயிலில் பின்பற்றும் ஆகமம் எது?

கோயில் வழிபாட்டு முறையைச் சொல்லும் நுால் ஆகமம். சிவ ஆகமங்கள் 28. அதில் ஒன்றான மகுட ஆகமம் இங்கு பின்பற்றப்படுகிறது.






      Dinamalar
      Follow us