ADDED : ஜூலை 24, 2020 09:19 PM

* ஒருவனுக்கு உள்ளத்தில் உறுதி இருந்தால் எண்ணியதை அடைய முடியும்.
* நீதி தவறாமல் வாழும் மனிதன் வானுலக தேவர்களுக்கு இணையாக மதிக்கப்படுவான்.
* ஒருவரின் குணத்தை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவரிடம் இருக்கும் பணத்துக்காக மதிப்பது கூடாது.
* மழையை எதிர்பார்த்து உயிர்கள் வாழ்வது போல, மக்கள் நேர்மையானவர்களின் நல்லாட்சியை எதிர்பார்த்து வாழ்கின்றனர்.
* குடும்பத்தை மேன்மை அடையச் செய்வேன் என்னும் உறுதியுடையவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக் கொண்டு உதவிட முன் வரும்.
* துன்பம் வரும் போது தாங்குவதற்கு நல்ல பிள்ளைகள் இல்லாத வீடும், நாடும் அடிப்பகுதியை வெட்டிய மரம் போல் விழுந்து விடும்.
* குளத்தில் உள்ள தாமரை மலரின் தண்டு, நீரின் ஆழத்திற்கேற்ப வளர்வது போல, ஒருவரின் உயர்வு அவரது முயற்சிக்கேற்ப இருக்கும்.
* பிறருக்கு உதவுபவர்கள் வறுமையுடன் இருப்பது கொடுமையானது. பிறருக்கு தீங்கு செய்பவர்கள் செல்வ வளத்துடன் இருப்பது கொடுமையிலும் கொடுமையானது.
சொல்கிறார் திருவள்ளுவர்