sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜூலை 31, 2020 01:10 PM

Google News

ADDED : ஜூலை 31, 2020 01:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* விரதம், பரிகார பூஜை செய்தாலும் பலன் தாமதமாகிறதே ஏன்?

டி.மைத்ரேயி, சென்னை

ஒருவருடைய தோஷத்தை பொறுத்து பலன் மாறுபடுவதுண்டு. பரிகாரம், விரதத்தை நம்பிக்கையுடன் செய்தால் பலன் கிடைக்கும்.

* குலதெய்வ கோயிலில் திருமணம் நடத்தலாமா?

எல்.விசாகன், கடலுார்

நடத்தலாம். குலதெய்வ அருளால் குடும்ப வாழ்வு சிறக்கும். திருமணத்தடை உள்ளவர்கள் இப்படி வேண்டிக் கொள்ள பலன் கிடைக்கும்.

* சுதர்சன ஹோமத்தின் சிறப்பைக் கூறுங்கள்?

எம்.சிவனஷே், திருப்பூர்

மகாவிஷ்ணுவின் கையில் உள்ள ஆயுதம் சுதர்சனம் என்னும் சக்கரம். தீய சக்திகளை அழிப்பதற்காக விஷ்ணு இதைக் கையில் எடுப்பார். ஆகம விதிப்படி சுதர்சன ஹோமம் நடத்த நோய் தீரும். திருஷ்டி, எதிரி பயம், செய்வினை பறந்தோடும். தொழில் வளர்ச்சி, வாகன யோகம் ஏற்படும்.

* சந்தனம், பன்னீர் அபிஷேகத்தை கடைசியாகச் செய்வது ஏன்?

கே.விகாஷினி, மதுரை

அபிஷேகம் செய்வதற்கு என வரிசைக்கிரமம் உள்ளது. அதன்படி சந்தனம், பன்னீருடன் அபிஷேகத்தை முடிக்க வேண்டும். இப்படிச் செய்தால் விரும்பிய வரம் கிடைக்கும்.

பிறந்த நட்சத்திரத்தன்று வளைகாப்பு நடத்தலாமா?

ஆர்.ஸ்வப்னா, காஞ்சிபுரம்

கூடாது. பிறந்த நட்சத்திரம், ராசிக்கு ஏற்ற நல்ல நாளை தேர்ந்தெடுத்து நடத்துங்கள்.

குழந்தைகளுக்கு நதிகளின் பெயர்களை வைக்கலாமா?

சி.சந்தோஷ், கோவை

புனிதமான நதிகளின் பெயர்களை குழந்தைகளுக்கு வைத்து கூப்பிட்டால் பெற்றோருக்கு புண்ணியமே. இதனால் வாக்கினால் செய்த பாவம் தீரும். நாவன்மை உண்டாகும்.

உயிருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்?

வி.காவ்யா, விருதுநகர்

உடலுக்கு அழிவு உண்டு; உயிருக்கு கிடையாது. பாவ, புண்ணியத்திற்குரிய பலனை அனுபவித்துத் தீரும் வரை உயிர் பிறப்பெடுக்கும். கர்ம வினையில் இருந்து முற்றிலும் விடுபட்ட உயிரை கடவுள் சேர்த்துக் கொள்வார். இதுவே மோட்சம் என்னும் பேரின்ப நிலை.

சந்திராஷ்டம நாளில் சுபநிகழ்ச்சி நடத்துவதில்லையே ஏன்?

பி.சித்தார்த், விழுப்புரம்

இந்நாளில் கோபம், வாக்குவாதம் ஏற்படும். சுபவிஷயங்களை சஞ்சலத்துடன் நடத்தக் கூடாது என்பதே காரணம்.






      Dinamalar
      Follow us