ADDED : ஜூன் 22, 2023 11:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அரசமரத்தின் சிறப்புகள் குறித்து பிரமாண்ட புராணத்தில் படைப்புக்கடவுளான பிரம்மா விரிவாக கூறியுள்ளார்.
* அரச மரத்தின் தெற்கு பக்க கிளையில் சிவபெருமான், மேற்கு கிளையில் மகாவிஷ்ணு. வடக்கில் பிரம்மாவும், கிழக்கில் தேவர்களும் குடியிருக்கின்றனர்.
* அரசமரத்தை சுற்றி வந்தால் மும்மூர்த்திகளையும், முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.
* குழந்தை வரம் வேண்டி பெண்கள் அரசமரத்தை வலம் வருவது வழக்கம். ஆண்களும் பகல் நேரத்தில் இந்த மரத்தை சுற்றலாம்.
* சூரியன் மறைந்த பிறகு அரச மரத்தைச் சுற்றக்கூடாது.
* திங்கள் சனிக்கிழமைகளில் வழிபடுவது நல்லது.

