ADDED : ஆக 25, 2023 11:06 AM

* நம்பிக்கையும் பொறுமையும் உள்ளவர்களின் பிரார்த்தனை நிச்சயம் நிறைவேறும்.
* நல்ல மனம் கொண்ட பக்தர்களின் வீட்டில் பற்றாக்குறை இருக்காது.
* மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இருக்கக் காரணம், அவரவர் செய்த பாவ புண்ணியங்களே.
* நல்லதோ கெட்டதோ உனக்குரிய வினைப் பயனை அனுபவித்தே ஆக வேண்டும்.
* மனிதப்பிறவி மகத்தானது. இதை உணர்ந்துகொண்டு பயனுள்ள பணிகளைச் செய்.
* துன்பத்தில் வருந்துபவர்களுக்கு உதவி செய்.
* நெருக்கடி நேரத்திலும் விவேகமாக செயல்படு.
* மற்றவர்களது துன்பத்தை பார்த்து மகிழ்ச்சி அடையாதே. அப்படி சந்தோஷப்பட்டால் அதுவும் பாவம் ஆகும்.
* உண்மை எது என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்ப செயல்படு.
* யாரிடமும் சண்டையிடாதே. அப்படி செய்தால் மனம் அமைதியாக இருக்கும்.
* உன்னை விமர்சிக்கும் இடத்தை விட்டு விலகிச் செல்.
* எதிராளி பத்து வார்த்தை பேசினால் பதிலுக்கு ஒரு வார்த்தை பேசு போதும்.
* பணம் இல்லாமல் வாழ முடியாது. அதே சமயம் கஞ்சனாக இருக்காதே.
* சுவாசிப்பது மட்டுமல்ல பிறருக்கு சேவை செய்வதே வாழ்க்கை.
* நீ செய்த வினைகளின் பயனை, யார் நினைத்தாலும் தடுக்க முடியாது.
* குறிக்கோள் உடையவர்கள் மங்காத புகழுடன் வாழ்வார்கள்.
கேட்கிறார் ஷீரடி சாய்பாபா