ADDED : ஆக 25, 2023 11:07 AM

ஆக.25 பிறந்தநாள்
* யார் உன்னை கைவிட்டாலும், நீ செய்த தானமும் தர்மமும் உன்னை கைவிடாது.
* எந்தப் பணியிலும் நிதானத்துடன் ஈடுபடு. அப்படி செய்தால் அதன் சூட்சுமங்கள் புரியும்.
* நல்லவர்களின் கோபம் மோதிரம் கழற்றும் நேரத்திற்குள் மறைந்து விடும்.
* எப்போதும் கடவுளையே நினைத்தால் மனம் சுத்தமாகும்.
* மானம் காக்க ஆடையும், மனம் காக்க வழிபாடும் அவசியம்.
* உனது வாழ்க்கை குடும்பத்துக்கும், நாட்டுக்கும் பயன் தருவதாக இருக்க வேண்டும்.
* பெற்றோரை விட சிறந்தவர் இவ்வுலகில் யாருமில்லை.
* ஞானிகளைப் பழித்தவர் மறுபிறப்பில் சிரமப்படுவார்.
* உனக்கு வரும் துன்பமே உறவினரையும் நண்பர்களையும் அளக்கும் அளவுகோல்.
* எல்லாம் தெரிந்தவர்களும் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் இல்லை.
* இந்த பிறவியில் செய்யும் நன்மைகளை மறுபிறப்பில் நிச்சயம் அனுபவிப்பாய்.
* நியாயமற்ற வழியில் வரும் பணத்தை கையால் கூட தொடாதே.
* அறிவு தரும் புத்தகங்களை படிக்காமல் இருப்பதே மக்கள் செய்யும் தவறு.
* புத்தகத்தால் வரும் அறிவை விட அனுபவத்தால் கிடைக்கும் அறிவு மேலானது.
* கோபம் வரும் போது கண்ணாடியில் முகத்தைப் பார். உனக்கே வெட்கமாக இருக்கும்.
* பலமுறை சிந்தித்த பிறகே எந்தவொரு விஷயத்திலும் ஈடுபட வேண்டும்.
என்கிறார் வாரியார்