sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

ராகு காலத்தில் துர்க்கையை வழிபடுவது எப்படி?

/

ராகு காலத்தில் துர்க்கையை வழிபடுவது எப்படி?

ராகு காலத்தில் துர்க்கையை வழிபடுவது எப்படி?

ராகு காலத்தில் துர்க்கையை வழிபடுவது எப்படி?


ADDED : பிப் 27, 2018 09:51 AM

Google News

ADDED : பிப் 27, 2018 09:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு செய்ய வேண்டிய விபரம் கிழமை வாரியாக தரப்பட்டுள்ளது.

ஞாயிறு: துர்க்கை சன்னதியில் மாலை 4:30-6:00 மணிக்குள் விளக்கேற்றி சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். செல்வம் பெருக இதைச் செய்வர்.

திங்கள்: காலை 7:30- 9:00 மணிக்குள் வெண்ணெய் காப்பு செய்து வெண்பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். மூட்டு நோய் நீங்கவும், கல்வியில் சிறக்கவும் இதைச் செய்யலாம்.

செவ்வாய்: மதியம் 3:00- 4:30 மணிக்குள் வடக்கு நோக்கி எரியும் வகையில் தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்ய வேண்டும். மாங்கல்ய பலம், குழந்தை பாக்கியத்திற்கு இந்த வழிபாடு.

புதன்: மதியம் 12:00 முதல் 1:30மணிக்குள் பஞ்சுத்திரி விளக்கேற்றி, புளியோதரை நைவேத்யம் செய்ய வேண்டும். பதவி உயர்வு, ரத்த சம்பந்தமான நோய் தீர இதைச் செய்யலாம்.

வியாழன்: மதியம் 1:30- 3:00 மணிக்குள் விளக்கேற்றி, எலுமிச்சம்பழம் சாதம் நைவேத்யம் செய்ய வேண்டும். வியாபார லாபத்திற்கும், இருதய நோய் நீங்கவும் இதைச் செய்யலாம்.

வெள்ளி: காலை 10:30- 12:00 மணிக்குள் நல்லெண்ணெய் அல்லது நெய் தீபமேற்றி, தேங்காய் சாதம் அல்லது பாயாசம் நைவேத்யம் செய்ய வேண்டும். தீராத துன்பம் தீரவும், ராகு தோஷத்தால் திருமணத்தடை நீங்கவும் இதைச் செய்யலாம்.

சனி: காலை 9:00 - 10.30 மணிக்குள் மஞ்சள் துணித்திரியில் விளக்கேற்றி, காய்கறியுடன் சாதம் நைவேத்யம் செய்ய வேண்டும். வேலை வாய்ப்பு, சிறுநீரக கோளாறு நீங்க, அரசியலில் வெற்றி பெற இந்த வழிபாடு உதவும்.






      Dinamalar
      Follow us