தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கார்த்திகை விளக்கு 108 போற்றி

கார்த்திகை விளக்கு 108 போற்றி

கார்த்திகை விளக்கு 108 போற்றி


ADDED : நவ 28, 2017 03:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2017 03:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி

ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி

ஓம் முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி

ஓம் மூவுலகும் நிறைந்தாய் போற்றி

ஓம் வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி

ஓம் இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி

ஓம் ஈரேழுலகும் ஈன்றாய் போற்றி

ஓம் பிறர்வயமாகாப் பெரியோய் போற்றி

ஓம் பேரின்ப பெருக்காய் பொலிந்தாய் போற்றி

ஓம் பேரருட் கடலாம் பொருளே போற்றி

ஓம் முடிவில் ஆற்றல் உடையாய் போற்றி

ஓம் மூவுலகும் தொழும் மூத்தோய் போற்றி

ஓம் அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி

ஓம் ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி

ஓம் ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி

ஓம் இருள் கெடுத்து இன்பருள் ஈந்தாய் போற்றி

ஓம் மங்கள நாயகியே மாமணி போற்றி

ஓம் வளமை நல்கும் வல்லியே போற்றி

ஓம் அறம்வளர் நாயகி அம்மையே போற்றி

ஓம் மின் ஒளி அம்மையாம் விளக்கே போற்றி

ஓம் மின் ஒளிப் பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி

ஓம் தையல் நாயகித் தாயே போற்றி

ஓம் தொண்டர் அகத்தமர் துாமணி போற்றி

ஓம் முக்கட் சுடரின் முதல்வி போற்றி

ஓம் ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி

ஓம் சூளாமணியே சுடரொளி போற்றி

ஓம் இருள் ஒழித்து இன்பம் ஈவோய் போற்றி

ஓம் அருள் பொழிந்து எம்மை ஆள்வோய் போற்றி

ஓம் அறிவினுக்கு அறிவாய் ஆனாய் போற்றி

ஓம் இல்லக விளக்காம் இறைவி போற்றி

ஓம் சுடரே விளக்காம் துாயோய் போற்றி

ஓம் இடரைக் களையும் இயல்பினாய் போற்றி

ஓம் அருள் விளக்கே அருட்சுடரே போற்றி

ஓம் எரிசுடராய் நின்ற இறைவி போற்றி

ஓம் ஞானச் சுடர் விளக்காய் நின்றாய் போற்றி

ஓம் அருமறைப் பொருளாம் ஆதி போற்றி

ஓம் துாண்டு சுடரனைய ஜோதி போற்றி

ஓம் ஜோதியே போற்றிச் சுடரே போற்றி

ஓம் ஓதும் உள்ஒளி விளக்கே போற்றி

ஓம் இருள் கெடுக்கும் இல்லக விளக்கே போற்றி

ஓம் சொல்லக விளக்காம் ஜோதியே போற்றி

ஓம் பலர்காண் பல்லக விளக்கே போற்றி

ஓம் நல்லக நமசிவாய விளக்கே போற்றி

ஓம் உவப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றி

ஓம் உடம்பெனும் மனையக விளக்கே போற்றி

ஓம் உள்ளத்தகளி விளக்கே போற்றி

ஓம் உயிரெனும் திரிமயக்கு விளக்கே போற்றி

ஓம் இடம்பெடும் ஞானத்தீ விளக்கே போற்றி

ஓம் நோக்குவார்க்கு எரிகொள் விளக்கே போற்றி

ஓம் ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி

ஓம் அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி

ஓம் ஜோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி

ஓம் தில்லைப் பொதுநட விளக்கே போற்றி

ஓம் கற்பனை கடந்த ஜோதியே போற்றி

ஓம் கருணையே உருவாம் விளக்கே போற்றி

ஓம் அற்புதக் கோல விளக்கே போற்றி

ஓம் அருமறைச் சிரத்து விளக்கே போற்றி

ஓம் சிற்பர வியோம விளக்கே போற்றி

ஓம் பொற்புடன் நடஞ்செய் விளக்கே போற்றி

ஓம் உள்ளத் திருளை ஒழிப்பாய் போற்றி

ஓம் கள்ளப் புலனைக் கரைப்பாய் போற்றி

ஓம் உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி

ஓம் பெருகு அருள்சுரக்கும் பெரும போற்றி

ஓம் இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி

ஓம் அருவே உருவே அருவுருவே போற்றி

ஓம் நந்தா விளக்கே நாயகியே போற்றி

ஓம் செந்தாமரைத் தாள் தந்தாய் போற்றி

ஓம் தீப மங்கள ஜோதியே போற்றி

ஓம் மதிப்பவர் மாமணி விளக்கே போற்றி

ஓம் பாகம் பிரியா பராபரை போற்றி

ஓம் ஆகம முடிமேல் அமர்ந்தாய் போற்றி

ஓம் ஏகமாய் நடஞ்செய் எம்மான் போற்றி

ஓம் ஊழி ஊழி உள்ளோய் போற்றி

ஓம் ஆழியான் காணா அடியோய் போற்றி

ஓம் ஆதியும் அந்தமும் அற்றாய் போற்றி

ஓம் அந்தமிலா இன்பம் அருள்வாய் போற்றி

ஓம் முந்தைய வினையை முடிப்போய் போற்றி

ஓம் பொங்கும் கீர்த்திப் பூரணி போற்றி

ஓம் தண்ணருள் சுரக்கும் தாயே போற்றி

ஓம் அருளே உருவாய் அமிந்தோய் போற்றி

ஓம் இருநில மக்கள் இறைவி போற்றி

ஓம் குருவென ஞானம் கொடுப்பாய் போற்றி

ஓம் ஆறுதல் எமக்கிங்கு அளிப்போய் போற்றி

ஓம் தீதெல்லாம் தீர்க்கும் திருவே போற்றி

ஓம் பக்தியில் ஆழ்ந்த பரமே போற்றி

ஓம் எத்திகும் துதி எந்தாய் போற்றி

ஓம் அஞ்சலென்றருளும் அன்பே போற்றி

ஓம் தஞ்சமென்றவரை சார்வோய் போற்றி

ஓம் ஓதுவோர் அகத்துள்ளுறை ஒளியே போற்றி

ஓம் ஓங்காரத் துள்ளொளி விளக்கே போற்றி

ஓம் எல்லா உலகமும் ஆனாய் போற்றி

ஓம் பொல்லா வினைகள் அறுப்பாய் போற்றி

ஓம் புகழ்ச்சேவடி என்மேல் வைத்தாய் போற்றி

ஓம் செல்வாய செல்வம் தருவாய் போற்றி

ஓம் பூங்கழல் விளக்கே போற்றி

ஓம் உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி

ஓம் உயிர்களின் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி

ஓம் செல்வம் கல்வி சிறப்பருள் போற்றி

ஓம் நல்லன்பு ஒழுக்கம் நல்குவாய் போற்றி

ஓம் விளக்கிட்டார்க்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி

ஓம் நலம் எலாம் உயிர்க்கு நல்குக போற்றி

ஓம் தரணி போற்றும் தேவியே போற்றி

ஓம் தாயே நின்னருள் தருவாய் போற்றி

ஓம் துாய நின்திருவடி தொழுதனம் போற்றி

ஓம் போற்றி என்பார் அமரர் விளக்கே போற்றி

ஓம் போற்றி என்பார் மனிதர் விளக்கே போற்றி

ஓம் போற்றி என் அன்பு ஒளிவிளக்கே போற்றி

ஓம் கார்த்திகை திருவிளக்கே போற்றி போற்றி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us