sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்! வாசகர்களின் @கள்விக்கு பதிலளிக்கிறார் மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாதசிவாச்சாõரியார்.

/

கேளுங்க சொல்கிறோம்! வாசகர்களின் @கள்விக்கு பதிலளிக்கிறார் மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாதசிவாச்சாõரியார்.

கேளுங்க சொல்கிறோம்! வாசகர்களின் @கள்விக்கு பதிலளிக்கிறார் மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாதசிவாச்சாõரியார்.

கேளுங்க சொல்கிறோம்! வாசகர்களின் @கள்விக்கு பதிலளிக்கிறார் மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாதசிவாச்சாõரியார்.


ADDED : அக் 08, 2010 04:46 PM

Google News

ADDED : அக் 08, 2010 04:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பஞ்சமூர்த்திகளில் ஒருவரான சண்டிகேஸ்வரர்  வரலாறு அனைவரும் அறிந்ததே. சண்டிகேஸ்வர வழிபாடு எப்படி ஏற்பட்டது என்று விளக்கவும்.  ஆர். நாகராஜன், புதுச்சேரி

விசாரசருமன் ஒரு சிவபக்தர். சிவபூஜை செய்த போது, அவருடைய தந்தையே தடுக்க வந்தார்.  கட்டுக்கடங்காமல் கோபம் கொண்டு, தந்தையின் ஒரு காலையே துண்டித்து விட்டார். சிவபெருமான் விசாரசருமனின் வேகத்தைக் கண்டு , ''சண்டேசர்'' என்று பெயரிட்டு அழைத்தார். 'சண்ட' என்பதற்கு 'மிகவேகமான' என்று பொருள். சிவன் கோயில்களில் ஈசனுக்கு அருகிலேயே தியானம் செய்யும் பாக்கியத்தைப் பெற்றார். சிவன் சொத்துக்களை அபகரிப்பவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் பெற்றவர் இவர் தான். காலப்போக்கில் 'சண்டேசர்' என்னும் சொல்லே 'சண்டிகேஸ்வரர்' என்று மாறி விட்டது.

கோயிலில் உடைக்கும் தேங்காய், குறுக்காக உடையாமல் கண்ணுக்கு நேரே நீளவாக்கில் உடைபடுவது அசுபத்தைக் காட்டும் அறிகுறி என்கிறார்களே? உண்மைதானா என்று தெரியப்படுத்துங்கள். எஸ். வெங்கடலட்சுமி, கோவில்பட்டி

நன்கு விளைந்த காயாக இருந்தால் நீளவாக்கில் உடைவதில்லை. விலை குறைவாக கிடைக்கிறதே என்பதற்காக கத்தரிக்காய் அளவிற்கு சிறிய தேங்காயை வாங்கி, பூஜைக்கு பயன்படுத்தாதீர்கள். அழுகிப் போயிருந்தால் மட்டுமே வேறு தேங்காய் உடைப்பது அவசியம். மற்றபடி குறுக்கே உடைவது, நீளவாக்கில் உடைவது என்பதெல்லாம் அசுபத்தின் அறிகுறி என்று மனதைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்  உண்டாகும்? துளசிலட்சுமி, பெரியபாளையம்.

சொத்துக்கள், புதையல்கள் ஏதேனும் அடையாளம் காட்டவோ- என்னவோ? அடுத்தமுறை கனவில் வரும்போது நினைவாக கேட்டு வைத்துக் கொள்ளுங்கள். கனவு என்பது ஆழ்மன எண்ணங்களின்  வெளிப்பாடு தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மற்றபடி கனவைப் பற்றி பெரிய அளவில் ஆராய்ச்சி செய்யாதீர்கள்.

கடவுளை கைகூப்பி வணங்கக் காரணம் என்ன? ரா.சங்கரநாராயணன், மதுரை

 வழிபடும்போது மனம், மொழி, உடலால் ஒன்றி வணங்க வேண்டும். வழிபாட்டின் போது, கடவுளைத் தவிர வேறு சிந்தனை மனதில் வரக்கூடாது. ஆனால், பிரச்னையே இங்கு தான்! மனம் எங்கோ இருக்க, உடம்பு மட்டும் சன்னதியில் நின்று கொண்டிருக்கும். பத்து விரல்களும் ஒன்றுபட்டுக் கைகள் குவிவது போல், மனமும் இறைவனின் திருவடிகளில் குவிந்து நிற்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். திருவாசகத்தில், ''கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க'' என்று குறிப்பிடுவதைக் காணலாம்.

** கந்தசஷ்டி கவசத்தை சில காரணங்களால் முருக பக்தர்களே சொல்லக்கூடாது என்கிறார்களே? உண்மையா? பி.பத்மாவதி, கோயம்புத்தூர்

யார் இப்படி சொன்னாலும் அது வெறும் கட்டுக்கதையே! புரளியை வேண்டுமென்றே சிலர் கிளப்பி விடுகிறார்கள்.  தேவராய சுவாமிகளால் இயற்றப்பட்ட ''கந்தசஷ்டி கவசம்'' என்பது எல்லோராலும் பாராயணம் செய்யக்கூடிய மந்திரத் துதி நூல். இதைப் பாராயணம் செய்வதற்கு எவ்வித தடைகளும் கிடையாது. பக்தியோடு படிக்கும் அனைவரையும் முருகப்பெருமான் கவசம் போல் பாதுகாத்து அருள்வான்.


இறந்த பிறகு ஒருவரது ஆன்மா இன்னொரு பிறவி எடுத்து வருகிறது. அப்படியிருக்கும் போது இறந்தவர்களுக்காக திதி கொடுப்பது அர்த்தமற்றமதாகி விடுமா?மல்லிகை மன்னன், மதுரை

இறந்தவர்கள் மறுபிறவி எடுக்கும் காலம் பற்றி நமக்குத் தெரியாது. இது இறைவனுக்கே வெளிச்சம். பெற்றோர், பாட்டனார்( பிதாமகர்), முப்பாட்டனார்(ப்ரபிதாமகர்) ஆகிய மூன்று தலைமுறைகளுக்கு சிரார்த்தம் செய்தாக வேண்டும். மறுபிறவி எடுத்திருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டு திதி செய்வதை விட்டுவிடக்கூடாது. நம் வம்சவிருத்தியின் ஆணிவேரே பிதுர்கடன் தான். முன்னோர்களுக்கு சிரத்தையுடன் இடும்  உணவுக்குத் தான் 'சிராத்தம்' என்பது  பெயராகும். இதனை 'சிரார்த்தம்' என்று சொல்வது தவறாகும்






      Dinamalar
      Follow us