தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : ஜூலை 08, 2016 10:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2016 10:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

 பிரிந்த தம்பதி இணைந்து வாழ என்ன பரிகாரம் செய்யலாம்?

என். ஜெ.கீர்த்தி, திருப்பூர்.

திங்கட்கிழமைதோறும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை மனதில் நினைத்து சோம வார விரதமிருந்தால் பிரிந்த தம்பதி மீண்டும் ஒன்று சேர்வர். சிவபெருமான், பாண்டியன் மகளான அன்னை மீனாட்சியோடு இணைந்தது மதுரையில் தானே. முடிந்தால் நேரில் சென்று தரிசிப்பது உடனடி பலனளிக்கும்.

* கடன் பிரச்னையிலிருந்து விடுபட எந்த தெய்வத்தை வழிபடுவது?

எஸ்.கண்ணன், மதுரை.

கடனில் இருந்து விடுபட விடாமுயற்சியும் உழைப்பும் தான் முதல் பரிகாரம். இதற்கு உறுதுணையாக திருவாரூர் மாவட்டம் திருச்சேறை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ருணவிமோசன சுவாமியை வழிபட வேண்டும்.'ருண' என்றால் கடன். 'விமோசனர்' என்றால் விடுவிப்பவர் என்று பொருள்.

பழைய ஆடைகளை பிறருக்கு தானம் செய்யலாமா?

பி.கவிதா, கல்லல்.

வாங்குவதற்கு ஆள் இருந்தால் தாராளமாகக் கொடுக்கலாம். இப்போதெல்லாம் அப்படி வாங்குபவர்கள் மிகவும் குறைந்து விட்டார்கள்.

* உடலை வருத்தி வழிபடுவதாக வேண்டினால் பலன் உடனடியாகக் கிடைக்குமா?

கு.நீலமேகன், தொடந்தனூர்.

இதெல்லாம் அவரவர் மனநிலையைப் பொறுத்தது. பக்தி மிகுதியால் உடலை வருத்தி விரதமும் மேற்கொள்வது சிலர் மட்டுமே. ஆனால்

பெரும்பாலானவர்கள் கஷ்டம் வந்த பிறகு அதிலிருந்து விடுபடுவதற்காக உடலை வருத்தி விரதம் இருக்கின்றனர். அங்கப்பிரதட்சணம், பூக்குழி மிதித்தல், மண்சோறு சாப்பிடுதல் என சிரமப்பட்டு சுவாமியை வணங்குவார்கள். உடலை வருத்தினாலும் சரி, வருத்தாமலே வழிபாடு செய்தாலும் சரி... எந்த பிரார்த்தனைக்கும் பலன் அளிக்க யோசிக்காதவர் தான் கடவுள்.

** சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்வதை விட ஏழைக் குழந்தைக்கு கொடுப்பது புண்ணியம் தானே?

என்.லோகேஸ்வர், லாஸ்பேட்டை.

சந்தேகமே வேண்டாம். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள். இது சிறந்த தர்மமும், புண்ணியமும் ஆகும். அதற்காக அபிஷேகப் பாலில் தான் புண்ணியம் தேட வேண்டும் என்பதில்லை. சுவாமிக்கு செய்வது என்பது மரத்தின் வேருக்கு நீர் ஊற்றுவது போன்றது. கிளைகள், இலைகளுமாகிய நமக்கு வேரிலிருந்து தண்ணீர் தாமாக கிடைக்கும். அதாவது ஏழைகள் என்றில்லாமல் எல்லாருக்கும் இறைவன் பால் வார்ப்பார்.

ஆஞ்சநேயருக்கு வடை மாலைக்கு பதிலாக ஜாங்கிரி மாலையை சாத்துகிறார்கள்.இது சரியா?

ஏ.மருதை, பள்ளிக்கரணை.

இனிப்பு, காரம் போன்ற பட்சணங்களால் குறிப்பிட்ட நாட்களில் அலங்காரம் செய்வதுண்டு. இதன்அடிப்படையில் தான் வடைமாலை நேர்த்திக்கடன் வழக்கத்தில் வந்தது. தற்போது இனிப்பு பதார்த்தமான ஜாங்கிரி வந்துள்ளது. இதில் தவறில்லை. இவற்றைத் தயாரிக்கும் முறைகளை சாஸ்திரம் மூலம் அறிந்து செய்வது நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us