தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : அக் 07, 2016 09:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2016 09:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* வெளியில் கிளம்பும் போது மூன்று பேராகச் செல்லக்கூடாது என்பது ஏன்?

ஆர்.ஜானகி, மயிலாப்பூர்.

நாம் கிளம்பும்போது எதிரில் வரும் நபர்கள், பொருட்கள், மிருகங்கள் ஆகியவை மூலம் செய்யப்போகும் செயல் இப்படித் தான் நடக்கும் என சகுன சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் நல்ல விஷயமாக கிளம்பும் போது மூன்று பேராகச் செல்வது கூடாது என்றும் சொல்வார்கள்.

* பூஜையறையில் தட்சிணாமூர்த்தியை எந்த திசை நோக்கி வைத்து வழிபட வேண்டும்?

கே.சுகந்தி, பெரியகுளம்.

இவருக்குப் பெயரே தென்முகக் கடவுள் என்பது தான். தெற்கு திசை நோக்கி வைத்து வழிபட்டால் வாழ்வில் எல்லா நன்மையும் பெறுங்கள்.

** பெண்கள் நெற்றியில் திலகம் இட்டுக் கொள்வது கட்டாயமா?

ரா.ரங்கசாமி, வடுகப்பட்டி.

இப்படியெல்லாம் கேட்கும்படியாக காலம் மாறி விட்டது. ஒரு குடும்பத்தின் மங்களமே சுமங்கலிப் பெண்கள் தான். அவர்களின் மங்களச் சின்னமே பொட்டும், பூவும். இதனைக் காப்பாற்றிக் கொள்ள அதாவது கணவன் ஆரோக்கியத்துடன் இருக்க எத்தனை பெண்கள் தவமிருக்கிறார்கள்...

நாகரிகத்தால் சில பெண்கள் செய்யும் தவறுகள் இது போன்ற கேள்விகளுக்கு இடமளிக்கிறது. பெண்கள் கட்டாயம் திலகம் இட்டுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

* ஆண்டவனை வழிபடுவதை விட அடியாரை வழிபடுவது சிறப்பு என்கிறார்களே.....?

எஸ்.வனிதா, கோவை.

வழிபாடுகளை குரு வழிபாடு, லிங்க வழிபாடு, சங்கம வழிபாடு என மூன்றாகப் பிரித்திருக்கிறார்கள். முதலில் குருநாதரையும், இரண்டாவதாக தெய்வத்தையும், மூன்றாவதாக அடியார்களையும் வழிபட வேண்டும். ஒன்றிற்காக ஒன்றை விட்டு விடலாம் என்று கருதுவது கூடாது.

* செவ்வாய், வெள்ளிக்கிழமையில் சிலர் பணம் கொடுக்க மறுப்பது ஏன்?

ஆ.கண்ணதாசன், வளசரவாக்கம்.

செவ்வாய் முருகனுக்கும், வெள்ளி லட்சுமிக்கும் உகந்த நாட்கள். இவ்விரு தெய்வங்களும் செல்வத்தைத் தருவதுடன் அது நம் வீட்டில் நிரந்தரமாக இருக்கவும் அருள்பவர்கள். எனவே இவர்களது நாட்களாகிய செவ்வாயிலும் வெள்ளியிலும் பெட்டியிலிருந்து பணம் எடுப்பதைத் தவிர்ப்பது வழக்கம். அதற்காக அத்தியாவசியமான விஷயங்களுக்கு பணம் தர மறுப்பது தவறு. முதல் நாளே எடுத்து வைத்துக் கொடுக்கலாம்.

* உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம் என்று ஞானிகள் சொல்கிறார்களே. இது உண்மை என்றால் கோயில் வழிபாடு செய்வது ஏன்?

ஏ.கல்யாணராமன், கள்ளக்குறிச்சி.

உள்ளம் பெருங்கோவில் எனும் பாடலை அருளியவர் திருமூலர். திருமந்திரத்தில் திருவாவடுதுறை கோவில் ஆலமரத்தடியில் தவமிருந்து திருமந்திரத்தை இயற்றியதாகக் குறிப்பு உள்ளது. 'சேர்ந்திருந்தேன் சிவ ஆவடுதன்துறையில்' எனத் துவங்குகிறது அப்பாடல். எனவே கோயில் வழிபாட்டை வேண்டாம் என்று அவர் கூறவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சிவபூஜையின் போது, முதலில் நம் மனதில் சிவனை எழுந்தருளச் செய்து, பிறகு லிங்க வழிபாடு செய்வது மரபு. அதாவது உள்ளத்திலும், நம் உயிரிலும் கலந்து நிற்கும் சிவனை 'அந்தர்யாகம்' எனப்படும் அக பூஜை செய்ய வேண்டும். அவரையே புறத்தில் உள்ள லிங்கத்தில் ஆவாஹனம் செய்து 'பஹிர்பூஜை' எனப்படும் புறப்பூஜை செய்ய வேண்டும். இதில் அக பூஜை செய்யும் முறையைக் கூறவே 'உள்ளம் பெருங்கோவில்' என்னும் பாடலை பாடியுள்ளார். எனவே இதைக் காரணமாகக் கொண்டு கோவிலுக்கு செல்லாமல் இருக்காதீர்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us